அன்பான மகள் வந்தாள்.. விஜய், அஜித், ரஜினி எல்லாம் பெண் குழந்தையா பிறந்தா எப்படி இருக்கும்.. க்யூட்!

சென்னை: நடிகர்களின் முதுமை மற்றும் இளமை தோற்றத்தை வைத்து சமீபத்தில் செய்யப்பட்ட ஏஐ எடிட் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளீயாகி உள்ள வீடியோ அதை விட டிரெண்டாகிவிடும் என்கிற அளவுக்கு செம க்யூட்டாக உள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத பல விஷயங்களை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளைஞர்கள் கற்பனை செய்து பார்த்து வீடியோவாகவே வெளியிட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சிம்பு எல்லாம் பெண் குழந்தைகளாக பிறந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையுடன் அவர்களது சாயலிலேயே அவர்களது கைகளில் பெண் குழந்தைகளாக தவழ்வது போன்ற ஏஐ எடிட் வீடியோவை ரசிகர்கள் உருவாக்கி ஷேர் செய்து வருகின்றனர்.

vijay rajinikanth ai

இதில், பல நடிகர்களுக்கும் பெண் குழந்தைகள் நிஜமாகவே உள்ளது என்பது தனிக்கதை. ஆனால், அந்த நடிகர்களின் மினி ஜெராக்ஸ் போலவே இருப்பது தான் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

க்யூட்டான விஜய்: நடிகர் விஜய்க்கு திவ்யா சாஷா என்கிற மகள் உள்ளார். ஆனால், அப்படியே தளபதி விஜய்யின் உருவத்தை அப்படியே உறித்து வைத்துக் கொண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்கிற கற்பனையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ வீடியோ தளபதி ரசிகர்களை நிச்சயம் குஷியில் ஆழ்த்தும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதுவும் அந்த அழகான வெள்ளை கவுனில் சிரிக்கும் அழகே கொள்ளையழகு.

கருப்பு தங்கம்: விஜய்யை தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் தனது கையில் தன்னை போலவே ஒரு பெண் குழந்தையை தூக்கிக் கொஞ்சும் காட்சியை பார்த்த ரசிகர்கள் கருப்பு தங்கம் என கொஞ்சி வருகின்றனர். கேப்டன் விஜயகாந்துக்கு இரண்டு மகன்கள் மட்டுமே உள்ள நிலையில், மகள் பிறந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

vijay rajinikanth ai

அஜித்தின் யங்கர் வெர்ஷன்: விடாமுயற்சி படத்தின் டிக்கெட்டுகளை அதிரடியாக புக் செய்து வரும் அஜித் ரசிகர்கள் இந்த அழகான வீடியோவை பார்த்தால் ரொம்பவே ஹேப்பியாகிவிடுவார்கள். அப்படியே அஜித்தின் யங்கர் வெஷனாக அனோஷ்காவை மிஞ்சும் அழகில் இப்படியொரு பெண் குழந்தையா என பலரும் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

vijay rajinikanth ai

சிம்பு கையில் பெண் குழந்தை: நடிகர் சிம்பு இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாத நிலையில், அவருக்குத் திருமணம் ஆகி இப்படியொரு பெண் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் அந்த காட்சிகளையும் சிம்பு பெண் குழந்தை போல இருக்கும் புகைப்படங்களையும் ஷேர் செய்து இப்பவே பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பிப்ரவரி 3ம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். கமல்ஹாசன் ஜாடையில் அப்படியே அவரது குட்டி பாப்பாவாக இப்படியொரு குழந்தை செம க்யூட்டாக இருக்கே என்றும் ஏஐ படித்துவிட்டு வந்திருக்கும் கமல்ஹாசன் அதை வைத்து தசாவதாரத்தை விட பெரிய படத்தை எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் கூறுகின்றனர்.

vijay rajinikanth ai

அந்த முடியே தனி ஸ்டைல்: கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவும் ஒரு பெண் குழந்தையை அப்படியே ஏஐ மூலம் எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த், செளந்தர்யா ரஜினிகாந்த் என அவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இந்த குழந்தையும் அதன் ஹேர் ஸ்டைலும் அப்படியே சூப்பர் போல உருவாக்கியிருப்பது சூப்பரப்பு என பாராட்டி வருகின்றனர். இன்னும் இது போல ஏஐ மூலம் என்னவெல்லாம் வித்தைகளை காட்டப் போகிறார்களோ தெரியவில்லை.

vijay rajinikanth ai

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X