தோளில் கை போட்ட விஜய், பாராட்டிய அஜீத்: சொல்கிறார் சிவகார்த்திகேயன்

By Siva

சென்னை: இளைய தளபதி விஜய்யும், தல அஜீத்தும் நான் பெரிய திரையில் சாதிக்கும் முன்பே என்னை தெரிந்து வைத்திருந்தார்கள் என்று பெருமைப்படுகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் பெரிய திரைக்கு வரும் முன்பு டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. தான் எங்கிருந்து வந்தோம் என்பதை சிவா இன்னும் மறக்கவில்லை.

அண்மையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அஜீத், விஜய் பற்றி பேசியுள்ளார்.

விஜய் சார்

விஜய் சார்

நான் விஜய் சாரை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தான் சந்தித்தேன். அவரது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியான ரசிகன் எக்ஸ்பிரஸில் நான் அவரைப் போன்றே பேசிக் காட்டினேன் என்றார் சிவா.

ஒரு போட்டோ

ஒரு போட்டோ

விஜய் சாருடன் சேர்ந்து போட்டோ எடுக்க காத்துக் கொண்டிருந்தேன். அவர் வந்து என் தோளில் கையை போட்டு நீங்கள் அருமையாக மிமிக்ரி செய்தீர்கள். சூப்பர் ஸ்டார் மாதிரி சூப்பராக பேசினீர்கள் என்று விஜய் தெரிவித்ததாக சிவா கூறினார்.

அஜீத்

அஜீத்

அதே சமயம் நான் அஜீத்தின் ஏகன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் நடித்த காட்சிகளை நீக்கவிட்டனர். படத்தில் நான் அஜீத் சாருக்கு உதவும் உளவாளியாக நடித்திருந்தேன்.

ஹாய் சிவா

ஹாய் சிவா

ஏகன் படப்பிடிப்பின் முதல் நாள் அன்று நான் அஜீத் சாருக்காக காத்திருந்தேன். வேட்டி சட்டையில் வந்த அவர் என்னை அடையாளம் கண்டு ஹாய் சிவா என்றார். அவருக்கு என்னை ஏற்கனவே தெரியும் என்பதை நினைத்து மகிழ்ந்தேன். மேலும் எனது நிகழ்ச்சிகளை பார்த்ததாகவும், அவை நன்றாக உள்ளதாகவும் பாராட்டினார் அஜீத் சார் என்றார் சிவா.

தல, தளபதி

தல, தளபதி

தல, தளபதியின் வாழ்த்துக்களும், பாராட்டும் எப்பொழுதுமே என் நினைவில் இருக்கும் என்று நெகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X