கில்லி vs துணிவு.. இந்த வாரம் ரீ ரிலீஸ் மோதல்.. விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ரியாக்ஷன் இதோ!
சென்னை: இந்த பிப்ரவரி மாதத்தில் வித் லவ் திரைப்படம் மட்டுமே 25 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி தியேட்டர் ஓனர்களை காப்பாற்றி வருகிறது. தியேட்டருக்குச் செல்ல விரும்பும் ரசிகர்களின் தேர்வாகவும் உள்ளது. சசிகுமார் நடிப்பில் வெளியான மை லார்ட், விஜய் ஆண்டனி தயாரித்து அவரது மருமகன் நடித்து வெளியான பூக்கி படங்கள் ரிலீஸ் ஆனாலும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
பிப்ரவரி மாதத்தில் அட்லீஸ்ட் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே வந்தாலாவது தலை தப்பிக்கும் என நினைத்த தியேட்டர் ஓனர்களுக்கு அந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்கிற தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

விஜய்யின் ஜனநாயகன் படமும் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாது என்கிற நிலையில், இந்த வாரம் கில்லி படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும், எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.
கில்லி vs துணிவு: விஜய்யின் கில்லி திரைப்படம் ஏற்கனவே ரீ ரிலீஸ் ஆகி அதிகபட்சமாக 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரஜினிகாந்தின் படையப்பா மற்றும் அஜித் குமாரின் மங்காத்தா உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் ஆனாலும் கில்லி சாதனையை முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், கில்லி ரீ ரிலீஸ் அதே போல வசூலை ஈட்டுமா அல்லது குறைவாகவே வசூல் செய்யுமா? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. மேலும், அஜித் குமாரின் துணிவு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், அந்த படமும் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.
எப்பவுமே எங்க அண்ணா விஜய் தான்: ரசிகர்களிடம் தமிழ் பிலிமிபீட் நடத்திய வாக்ஸ் பாப்பில் விஜய் ரசிகர்கள் கில்லி ரீ ரிலீஸ் ஆனாலும் கண்டிப்பாக அந்த படத்தைத் தான் தியேட்டருக்குச் சென்று பார்ப்போம் என்றும் எங்க அண்ணன் தான் எப்பவுமே என்றும் உணர்ச்சி பொங்க பதிலளித்துள்ளனர். மேலும், ஜனநாயக்ன் ரிலீஸ் ஆகாதது வருத்தமாக உள்ளது என்றும் சீக்கிரமே அந்த படம் வெளியாக வேண்டும் என்றும் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
அஜித்துக்காக பார்ப்போம்: அதே சமயத்தில் அஜித் ரசிகர்கள் பலரும் துணிவு படத்தைத் தான் பார்ப்போம் என்றும் மங்காத்தா ரீ ரிலீஸ் தெறிக்கவிட்டதை போல துணிவு ரீ ரிலீஸும் தமிழ்நாட்டில் தெறிக்கவிடும் எனக் கூறியுள்ளனர். விஜய்யின் தெறி படமும் அடுத்த வாரம் 27ம் தேதி ரீ ரிலீஸ் ஆகப் போவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











