GOAT: விஜய் அஜித்தின் விடாமுயற்சி.. பிரசாந்துக்கு முன்னால் வந்து நிற்க என்ன செய்தார்கள் தெரியுமா?

சென்னை: இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் படத்தை கொடுத்து ரசிகர்களை மலைக்க வைத்தார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அதே அர்ஜுன் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

அப்படியே அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை எட்டிப் பார்த்தால் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா விஜய்க்கு பின்னாடி நிற்கிறார்.

Vijay and Ajiths continuous effort makes them to beat Prabhu Deva and Prashanth in Tamil Cinema

காதலன் ஞாபகமிருக்கா?: ஜென்டில்மேன் படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய காதலன் படம் ரசிகர்களுக்கு எப்போதும் நீங்காமல் நினைவில் இருக்கும். அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த "என்னவளே அடி என்னவளே" மெலடி முதல் "முக்காலா முக்கப்புலா" தாறுமாறு டான்ஸ் வரை எதுவுமே மறக்காது. அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் பிரபுதேவா. இப்போ தனுஷ் அப்பாவியாகவும் வேலையில்லா பட்டதாரியாகவும் திருச்சிற்றம்பலமாக நடிப்பதையெல்லாம் அப்போதே நடித்து அசத்தியவர் பிரபுதேவா.

Vijay and Ajiths continuous effort makes them to beat Prabhu Deva and Prashanth in Tamil Cinema

டபுள் ஆக்‌ஷனில் திணறடித்த ஜீன்ஸ்: 1993ல் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் படம், 1994 அடுத்த வருஷமே பிரபுதேவாவை வைத்து காதலன் படம் என மிரட்டி அப்பவே பிரம்மாண்ட இயக்குநராக மாறும் ஷங்கர் அடுத்து விஜய்யை வைத்தோ, அஜித்தை வைத்தோ படங்களை இயக்கவில்லை. 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த டாப் ஸ்டார் பிரசாந்தை வைத்து 1998ல் ஜீன்ஸ் படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பும் எத்தனையோ டபுள் ஆக்‌ஷன் படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், எந்தவொரு பிசிறும் தட்டாமல் தாடி வைப்பது, மறு வைப்பது என எந்தவொரு மாறுவேஷ வேடிக்கைகள் கூட செய்யாமல் அப்படியே அச்சு அசல் இருவரும் ஒரே மாதிரி இருப்பது போல பிரசாந்தை வைத்து ஜீன்ஸ் படத்தை கொடுக்கிறார் ஷங்கர். உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் ஹீரோயின்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வைரமுத்து பாட்டெழுதிய "பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்" பாடலுக்கு உலகில் உள்ள 7 அதிசயங்களுக்கும் டாப் ஸ்டார் பிரசாந்தை கொண்டு சென்று ஐஸ்வர்யாவுடன் நடனமாட வைத்து உருவாக்கிய அந்த பாடலை பீட் செய்ய இன்றளவும் ஒரு அதிசயமான பாடல் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அப்படியொரு மேஜிக்கை பிரசாந்தை வைத்து ஷங்கர் செய்திருந்தார்.

விடாமுயற்சியால் வளர்ந்த விஜய்: இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என ஆரம்பத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட விஜய்யின் ஃபேஸ் வேல்யூ இன்று 200 கோடி ரூபாய் ஒரு படத்துக்கு என வளர்ந்து நிற்க முக்கிய காரணமே அவரது விடாமுயற்சி மற்றும் கடுமையான உழைப்பு தான். உதயா படத்தில் தான் முதன் முதலாக விஜய்க்கு ஏ.ஆர். ரஹ்மான் பாடல் இசையமைக்கிறார். நண்பன் படத்தில் தான் ஷங்கர் விஜய்யை இயக்குகிறார். இன்று விஜய்க்கு ஷங்கர் தேவையில்லை. ஆனால், ஷங்கருக்கு விஜய் கால்ஷீட் கிடைத்தால் நல்லா இருக்கும் என்கிற சூழல் உருவாகும் அளவுக்கு தளபதி விஜய்யாக வளர்ந்து நிற்கிறார்.

பிரபுதேவா, பிரசாந்த் பின்னாடி போகல: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா நடித்துள்ள நிலையில், பொங்கலை முன்னிட்டு வெளியான போஸ்டரில் விஜய்க்கு பின்னால் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில், அவர்கள் இருவரும் பின்னாடி போகல.. விஜய் தனது கடுமையான உழைப்பால் முன்னாடி வந்து சும்மா கெத்தா நிற்கிறார். தமிழ் சினிமாவுக்கு கடந்த ஆண்டு 900 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸிலேயே லாபத்தை ஈட்டிக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அஜித்தும் அப்படிதான்: 1996ம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான கல்லூரி வாசல் படத்தில் பிரசாந்த் மற்றும் அஜித் குமார் இணைந்து நடித்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். ஒருமுறை ஒரு விழாவில் பிரசாந்துக்கு ஆளுயுர மாலை அணிவிக்கப்பட்டு அதன் அருகே அஜித் குனிந்த தலையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால், இன்று அஜித்தின் கட் அவுட்களுக்கு போடப்படும் மாலைகள் எல்லாம் பிரசாந்துக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு அஜித்தின் புகழும் விண்ணை முட்டி எங்கேயோ சென்று விட்டது. 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நாயகர்களாக ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் மட்டுமே தமிழ் சினிமாவில் உள்ளனர் என்பது அடுத்தவர்களை கீழே இறக்கி அவர்கள் மேலே ஏறியதை காட்டவில்லை. எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட அவர்கள் மெனக்கெட்ட முயற்சிக்கு பலன் தான் இதெல்லாம். நெகட்டிவிட்டியை எல்லாம் தள்ளி வை பேபி! எய்ம் பிக், வாழு வாழவிடு என்பதையெல்லாம் விஜய், அஜித் சும்மா சொல்லவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X