பொங்கல் விடுமுறை வரை ஜன நாயகன் படம் வராதா?.. ’தலைவா’ தலைவலி.. மீண்டும் விஜய்க்கு?

சென்னை: ஒன் லாஸ்ட் டான்ஸ் என ஜன நாயகன் படத்தை தனது கடைசி படம் என விஜய் சொன்னதை போல, ஒன் லாஸ்ட் டைம் விஜய் படத்துக்கு பிரச்சனையை பண்ணிக்கிறோம் என அனைத்து தரப்பும் ஆப்பு அடித்து வருவதாக நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பியுள்ளனர்.

ஒரு பக்கம் திமுக பிரச்சனை காரணமாக பராசக்தி படத்துடன் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இன்னொரு பக்கம் பாஜகவை தொடர்ந்து விஜய் எதிர்த்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் தணிக்கைச் சான்று கொடுக்கும் இடத்தில் கை வைத்து விட்டனர் என விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Vijay and Jana Nayagan team facing big release problem

தலைவா, காவலன் என தொடர்ந்து விஜய்யின் பல படங்களுக்கு கடைசி நேரம் வரை சிக்கல் வந்த நிலையில், அரசியலுக்கு வந்து திமுக மற்றும் பாஜகவை கடுமையாக எதிர்த்து அரசியல் பேசிய விஜய் தனது ஜன நாயகன் படத்திலும் இரு கட்சிகளுக்கும் எதிரான வசனங்களையும் காட்சிகளையும் வைத்துள்ளதால் தான் பெரும் சிக்கல் என்றும் கூறுகின்றனர்.

ஜனவரி 10 கூட டவுட்டு தான்: தேசிய விருது பெற்ற பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்து நடித்தால் எந்தவொரு சிக்கலும் வராது என்றும் தான் சொல்ல நினைத்த அரசியல் கருத்துக்களை அந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என விஜய் ஒரு பக்கா பிளான் போட்டு பகவந்த் கேசரியை ரீமேக் செய்ய வார்டன் சொன்னாலே அடிப்போம் என்கிற ரீதியில் சென்சார் போர்டு படத்தை பார்த்து விட்ட நிலையில், தணிக்கை சான்றிதழை மட்டும் தராமல் இழுத்தடித்து வருகிறது. அதை எதிர்த்து ஜன நாயகன் படக்குழு வழக்கு தொடுத்த நிலையில், ஜனவரி 10ம் தேதிக்கு ரிலீஸ் செய்யக் கூடாதா? என நீதிபதி கேட்டது தான் தற்போது ஜன நாயகன் படம் 10ம் தேதியாவது வருமா? வராதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ரசிகர்கள் விஜய்க்கு எதிராக சதி நடக்கிறது என புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

ஆடியோ லான்ச்சில் விஜய் பேச்சு: ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவிலேயே தளபதி விஜய் சும்மாவே தனது படத்துக்கு எதிர்ப்புகள் வரும், இப்போ நான் வேற ரூட்டை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், இந்த படத்தை நீங்க பண்ணுறீங்களா என தயாரிப்பாளரிடம் கேட்டேன், அதற்கு அவர் அதையெல்லாம் பார்த்துக்கலாம் என இந்த படத்தை தொடங்கினார் என்று பேசியிருந்தார்.

பொங்கல் வரை வராதா?: இந்நிலையில், விஜய் சொன்னதை போலவே அவருடைய ஜன நாயகன் படத்தின் ரிலீசுக்கு சிக்கல் வந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பிளான் செய்து விஜய் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட நிலையில், பொங்கல் விடுமுறை முடியும் வரை ஜன நாயகன் படத்தை வெளியிட விடாமல் செய்ய சதி நடப்பதாக கூறுகின்றனர். ஆனால், அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து திட்டமிட்டபடியே ஜன நாயகன் படத்தை விஜய் ரிலீஸ் செய்வார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X