GOAT படத்தில் பஞ்சாயத்தா?.. விஜய்க்கும் பிரசாந்த்துக்கும் ஈகோ சண்டை?.. செய்யாறு பாலு சொன்ன சீக்ரெட்

சென்னை: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்ததால் கண்டிப்பாக இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களை கேட்க வைப்பதற்காக மெனக்கெட்டு உழைத்துவருகிறது படக்குழு. இதில் டாப் ஸ்டார் பிரசாந்த் பல வருடங்கள் கழித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

விஜய் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தப் படமானது உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே லியோவில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 68ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் விஜய். அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு இந்தப் படம் 25ஆவது படம் என்பதும்; புதிய கீதை படத்துக்கு பிறகு விஜய்க்கு யுவன் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay and Prasanth have an ego battle in GOAT Movie Shooting

GOAT: படத்துக்கு Greatest Of All Time (GOAT) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் சென்னை, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் இலங்கையில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பக்ரீத் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் ரீ என்ட்ரி: 90களில் முன்னணியில் இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். அவர் விஜய் மற்றும் அஜித் ஆகியோரை காட்டிலும் மவுசாக இருந்தவர். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழல் உருவானது அவருக்கு. தற்போது மீண்டும் அவர் நடிக்க ஆரம்பித்திருப்பதாலும்; விஜய்யும், அவரும் ஸ்க்ரீனில் எப்படி இருப்பார்கள் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Vijay and Prasanth have an ego battle in GOAT Movie Shooting

விஜய்யுடன் நடிக்கிறேன்: சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் பிரசாந்த்திடம் விஜய் படத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், "விஜய் படத்தில் நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறேன்"என்று சொல்லி கெத்து காண்பித்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பிரசாந்த் சரியான ஈகோ பிடிச்ச ஆளா இருக்காரே என்று கமெண்ட்ஸை பறக்கவிட்டனர். இருந்தாலும் ஒருதரப்பினர் அவர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. ஒருகாலத்தில் எப்படி இருந்த மனிதர் அவர். அவரிடம் போய் அவரை மட்டம் தட்டுவது மாதிரி கேள்வியை எல்லாம் கேட்கக்கூடாது என்றனர்.

ஈகோ சண்டை: இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு சொல்லியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "பிரசாந்த் தனது ஈகோவை விட்டுக்கொடுக்கவில்லை. செய்தியாளர்களிடம், நான் விஜய்யுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் வெங்கட் பிரபுவிடம் இந்தப் படத்தில் விஜய்க்கு இணையான காட்சிகளும் தனக்கு வேண்டும் என்று மல்லுக்கட்டி வருகிறார்" என்றார். இதற்கிடையே பிரசாந்த் இப்படி நடந்துகொள்வதால் விஜய்யும் கொஞ்சம் அப்செட் என்று திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X