வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை.. விஜய்க்காக எதையும் இழக்க தயாரான சின்ன பகவதி ஜெய்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் ஆகியிருப்பதை அவரது ரசிகர்களும், தொண்டர்களும் இன்னமும் கொண்டாடிவருகிறார்கள். பல வருட நடைமுறையை தங்கள் தளபதி அடித்து நொறுக்கிவிட்டார் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் பகவதி படத்தில் நடித்த நடிகர் ஜெய் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆண்டவர்கள் தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதாதான் கடைசி என்று பலரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தபோது கூட அவர் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லை. ஆனால் விஜய் கட்சி தவெகவோ கில்லி மாதிரி 108 தொகுதிகளில் வென்று காட்டியது. பல தொகுதிகளில் வேட்பாளரின் முகம்கூட தெரியாமல் விசில் சின்னம், விஜய் என்ற இரண்டு விஷயங்களுக்காக மட்டும் மக்கள் வாக்களித்த சம்பவம் எல்லாம் நடந்தது.

திரைத்துறையில் ஆதரவு: கோலிவுட்டை பொறுத்தவரை பலரும் விஜய்க்கு ஆதரவான மனநிலைமையில்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஓபனாக வெளியே காண்பித்துக்கொண்டார்கள்; பலரும் சத்தமே இல்லாமல் வாக்களிக்கும் நாள் அன்று விசில் சின்னத்தில் அழுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். விஜய்யின் வெற்றியை கொண்டாடுவதற்காக சிம்பு அரசன் படத்தின் ஷூட்டிங்கிலிருந்தே பிரேக் எடுத்திருக்கிறார் என தகவலும் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமுத்திரகனி உள்ளிட்டோர் எல்லாம் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டே இருந்தார்கள்.
பரப்புரை செய்த விஜய்: விஜய்க்கு கோலிவுட்டில் கிடைத்த ஆதரவுகளில் ஜெய்யின் ஆதரவும் ஒன்று. சுப்ரமணியபுரம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் அவர்; விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்துதான் தன்னுடைய கரியரையே ஆரம்பித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. எப்போதுமே விஜய் மீது தீராத ப்ரியம் கொண்டிருக்கும் அவர்; நடந்து முடிந்த் தேர்தலில் வேளச்சேரி தொகுதி தவெக வேட்பாளருக்கு மக்களிடையே வந்து பரப்புரையையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சியில் ஜெய்: அவர் அப்படி பரப்புரை செய்தது அவருக்கே பெரிய பிரச்னையை உருவாக்கலாம் என்றுதான் அவரது அபிமானிகள் அஞ்சினார்கள். ஆனாலும் விஜய் என்ற ஒருவருக்காக மட்டுமே அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பரப்புரைக்கு தைரியமாக சென்றார். இப்போது தன்னுடைய விஜய் அண்ணா முதலமைச்சராகியிருப்பதை மகிழ்ச்சியோடு ரசித்துவருகிறார் ஜெய். இந்நிலையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்திருக்கும் பேட்டி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜெய் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "ரஜினி சாரைத்தான் விஜய் அண்ணா ஃபாலோ செய்வதாக எல்லோரும் சொல்வார்கள். சிலரோ, அவர் கார்த்திக் சாரை ஃபாலோ செய்வதாக சொல்வார்கள். விஜய்யின் சில மேனரிசங்களை கூர்ந்து கவனித்தால் அதில் கார்த்திக் சாரின் டச் இருப்பது தெரியும். சில மேனரிசங்கள் ரஜினி சார் மாதிரி இருக்கும். அதிலும்கூட கார்த்திக் சாரின் சாயல் தெரியும். விஜய் அண்ணா ஸ்க்ரீனில் அழுதால்கூட நான் நிஜத்தில் அழுதுவிடுவேன். இந்த வாழ்க்கையையே அவர்தான் கொடுத்தது. அவருக்கு ஆதரவு கொடுப்பதல் இந்த வாழ்க்கை போகுமென்றால் அதை இழக்கவும் நான் தயார். எனக்கு எந்தக் கவலையும் இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications
