'என் சார்பாக யாரும் பேச வேண்டாம்'... விஜய் அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஜய் சார்பாக ஊடகங்களில் பேசுவது குறித்து விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

என் சார்பாக ஊடகங்களில் வேறு யாரும் பேச வேண்டாம்.. விஜய் அதிரடி அறிவிப்பு!- வீடியோ

சென்னை : தன் சார்பாக வேறு யாரும் ஊடகங்களில் பேச வேண்டாம் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வருபவர் பிடி.செல்வகுமார். சினிமா தயாரிப்பாளரான இவர், நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளர்.

Vijay announcement about P.T.Selvakumar

இந்நிலையில் பிடி.செல்வகுமார் குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொறுப்பாளர் ஆனந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,

"விஜய் அவர்களின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போது வேறு சில காரணங்களால் அப்பணியில் இல்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.

[2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க! ]

மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொறுப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை. இருப்பினும் விஜய் அவர்கள் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, விஜய்யின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை விஜய் விரும்பவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

அதோடு, விஜய் அவர்கள் எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை . அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஆகவே, விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்று கருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களை யாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்", என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X