ருத்ர தாண்டவம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள்.. இயக்குநர் மோகன் ஜியை பாராட்டிய விஜய் ஆண்டனி!

சென்னை: ருத்ர தாண்டவம் படத்தை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதா ரவி, கெளதம் மேனன் மற்றும் தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

செம டிரெண்டிங்

செம டிரெண்டிங்

#ருத்ரதாண்டவம் எனும் ஹாஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. நேற்று வெளியான படத்தின் ஸ்நீக் பீக் மற்றும் படத்தின் ப்ரீவியூ ஷோ உள்ளிட்டவை ஏற்படுத்திய தாக்கம் தான் இந்த டிரெண்டிங்கிற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சாத்தான்கள்

தமிழ்நாட்டில் சாத்தான்கள்

ஸ்நீக் பீக்கில் மனோபாலா பேசும் அந்த காட்சியை ஷேர் செய்து தமிழ்நாட்டில் தான் அதிக சாத்தான்கள் உள்ளனர் என்பது போல சில பாஸ்டர்கள் போலியாக பேசி மக்களை ஏமாற்றி வருவதற்கு பதிலடியாக இந்த படம் இருக்கும் என கூறி வருகின்றனர்.

5.6 மில்லியன் வியூஸ்

5.6 மில்லியன் வியூஸ்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கெளதம் மேனன், ராதா ரவி, தம்பி ராமைய்யா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்த டிரைலருக்கு யூடியூபில் நல்ல வரவேற்பு கிடைத்து 5.6 மில்லியன் வியூக்களை கடந்துள்ளது.

விஜய் ஆண்டனி பாராட்டு

விஜய் ஆண்டனி பாராட்டு

திரெளபதி திரைப்படம் வெளியாகும் போது இயக்குநர் மோகன் ஜியின் படத்துக்கு இயக்குநர் நவீன் உள்ளிட்ட பலரும் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மோகன் ஜியின் ருத்ர தாண்டவம் படத்தை பாராட்டி ட்வீட் போட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

பாசிட்டிவ் விமர்சனங்கள்

சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்காக பிரத்யேக காட்சி இன்று திரையிடப்பட்ட நிலையில், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது இயக்குநர் மோகன் ஜி அவர்களே வாழ்த்துக்கள் என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி வாழ்த்தி உள்ளார்.

கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானதல்ல

கிறிஸ்துவ மதத்துக்கு எதிரானதல்ல

மதமாற்ற பிரச்சனையை கையில் எடுத்து இயக்குநர் மோகன் ஜி இயக்கி உள்ள இந்த படம் கிறிஸ்துவ மதத்துக்கு எதிரான படம் என சிலர் பிரச்சாரம் செய்வதாகவும், ஆனால், இந்த படம் கிறிஸ்துவ மதத்துக்கு எதிரான படம் அல்ல மதத்தின் பெயரால் மோசடி செய்பவர்களை மட்டுமே அடையாளம் காட்டும் படமாக இது இருக்கும் என மோகன் ஜி பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில், விஜய் ஆண்டனியே பாராட்டி இருப்பது படத்திற்கு மேலும், பலம் சேர்க்கு என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X