அது நான் இல்ல.. இது சலீம் 2 இல்லை.. விஜய் ஆண்டனி நச் பதில்!
சென்னை: விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் நடித்து இருக்கும் மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்து வரும் நிலையில் விஜய் மில்டன், படத்தில் தனக்கு தெரியாமல் ஒரு நிமிட காட்சியை இணைத்துவிட்டதாக புகார் கூறியிருந்தார். இந்த பிரச்சனை பூதாகரமானதை அடுத்து சரத்குமார் இதில் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், 2014-ம் ஆண்டு கோலி சோடா என்ற படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். இதைத் தொடர்ந்து பல படங்களை இயக்கிய விஜய் மில்டன், விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் சரத்குமார், மேகா ஆகாஷ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படம் 2ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படத்தில் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்த இயக்குனர் விஜய் மில்டன், மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தை இயக்கி இருந்தேன்.
ஆனால் அந்த ட்விஸ்டுகள் உடையும் வகையில், படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியிலேயே அவன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும். இது யார் செய்த சதி என தெரியவில்லை. அந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று பேசி இருந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளான நிலையில், இந்த பிரச்சனையில் தலையிட்ட சரத்குமார், விஜய் மில்டன் மற்றும் தயாரிப்பாளர் இடையே இருந்த பிரச்சனையை பேசி தீர்த்து, அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டது.

அது நான் இல்லை: விஜய் ஆண்டனி நடித்த சலீம் காட்சியை மழை பிடிக்காத மனிதன் படத்தில் வைத்தது யார்? படத்தின் கதையை மாற்றி எடிட் செய்தது யார் என்ற கேள்வி எழுந்தன. இதற்கு விஜய் ஆண்டனி என்ன பதில் சொல்லப் போகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அது நான் இல்லை, மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் வரும் அந்த இரண்டு நிமிட காட்சிகளை தனது ஒப்புதல் இல்லாமல், யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர், படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து இருந்தார். அது நான் இல்லை.. இது சலீம் 2 இல்லை என விஜய் ஆண்டனி விளக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











