'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்!
கொலைகாரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜுன் கலந்துகொண்டு பேசினார்.
Recommended Video
சென்னை: விஜய் ஆண்டனி தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாக நடிகர் அர்ஜுன் கூறினார்.
அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலைகாரன். புதுமுக இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அர்ஜுன், விஜய் ஆண்டனி தன்னிடம் பொய் சொல்லிவிட்டதாகக் கூறி கலாய்த்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,

என் வயது
''இங்கு பேசியவர்களில், சின்ன வயசுல இருந்து என்னை பார்ப்பதாக ஒருவர் சொல்கிறார். எனக்கு முடி இன்னும் கொட்டவில்லையே என மற்றொருவர் கூறுகிறார். எனது வயதை குறிப்பிடுவதற்காக இப்படி பேசுகின்றனர்.

என்னுடைய கதாபாத்திரம்
ஒரு படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்பு, அந்த படத்தில் எனது கதாபாத்திரமும், மற்றவர்களுடைய கதாபாத்திரமும் எப்படி இருக்கிறது என்பதை கவனிப்பேன். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் சிறப்பாக வந்துள்ளது
நான் படம் பார்த்துவிட்டேன். ஆண்ட்ரு மிகச்சிறப்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். என்னிடம் கூறியதைவிட 10 மடங்கு சிறப்பானதாக படத்தை தந்திருக்கிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை உள்ளது.

பொய் சொல்லிவிட்டார்
இந்த படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி ஒரு நல்ல மனிதர். நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டனர். ஆனால் அவர் என்னிடம் ஒரு பொய் சொல்லிவிட்டார். ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது எனக் கூறினார். ஆனால் பாடல் காட்சியை பார்க்கும் போது அது பொய் என்பது தெரிகிறது.

ரொமான்ஸ் காட்சிகள்
ரொமான்ஸ் காட்சிகள் அருமையாக வந்துள்ளன. ஹீரோயினுடன் எனக்கு ஒரு பாட்டு இருக்கு என இயக்குனர் கூறினார். ஆனால் அதை எடுக்கவில்லை. இது ஒரு அருமையான படம். அனைவரும் ஆதரவு தரவேண்டும்". இவ்வாறு அர்ஜுன் கூறினார்.


Click it and Unblock the Notifications











