விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் கொல மாஸான டைட்டில் வெளியானது!

சென்னை : மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

அந்த வகையில் மெட்ரோ இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணனுடன் முதல் முறையாக இணைந்த கோடியில் ஒருவன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து வசூல் செய்து வருகிறது.

ஏற்கெனவே அரை டஜன் திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வர புதிய படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்சன் ஹீரோவாக

ஆக்சன் ஹீரோவாக

தனித்துவமான இசைக்கு மட்டுமல்லாமல் தனித்துவமான படங்களுக்கும் பெயர் போனவர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி இப்பொழுது ஆக்சன் ஹீரோவாக மாறி கலக்கி கொண்டுள்ளார்.

கோடியில் ஒருவன் 25 நாட்களை

கோடியில் ஒருவன் 25 நாட்களை

மெட்ரோ இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த கோடியில் ஒருவன் சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் இடத்திலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிரடியான ஆக்ஷன் திரைப்படமாக வெளியான கோடியில் ஒருவன் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையில் வசூல் செய்து வருகிறது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்திருந்தார்.

Recommended Video

Beast Update கொடுத்த VTV Ganesh | Jiiva, Nelson Dilipkumar
பாலாஜி குமார் இயக்கத்தில்

பாலாஜி குமார் இயக்கத்தில்

கோடியில் ஒருவன் கொடுத்த வெற்றியின் பூரிப்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனிக்கு தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விடியும் முன் பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்துள்ளது.

ரித்திகா சிங்

ரித்திகா சிங்

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இறுதிச்சுற்று பட புகழ் ரித்திகா சிங் நடித்துள்ளார். கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.

கொலை

கொலை

இந்த நிலையில் படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தனது ஒவ்வொரு படங்களுக்கும் பார்த்தவுடனே ஈர்க்கின்ற வித்தியாசமான டைட்டில்களை வைத்து வரும் விஜய் ஆண்டனி அதே பார்முலாவில் இந்த படத்திற்கும் தலைப்பை "கொலை" என வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X