கொலை படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டைட்டிலை வெளியிட்ட விஜய் ஆன்டனி

சென்னை : நடிகர் விஜய் ஆன்டனி பாலாஜிகுமார் இயக்கத்தில் நடித்துவரும் படத்திற்கு கொலை என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள விஜய் ஆன்டனி, படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.

கோடியில் ஒருவன் படத்திற்கு பிறகு தற்போது அரைடஜனுக்கும் அதிகமான படங்களில் விஜய் ஆன்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி இசையமைப்பாளராக இருந்து தன்னை ஹீரோவாக்கிக் கொண்டவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களை தந்து வருகிறார். இவரது நடிப்பு குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் வருகிறார்.

கோடியில் ஒருவன் படம்

கோடியில் ஒருவன் படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் கோடியில் ஒருவன் படம் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை, விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆன்டனி. இவற்றில் சில படங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

சிறப்பான இசை

சிறப்பான இசை

தன்னுடைய படங்களுக்கு பெரும்பாலும் தானே இசையமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் விஜய் ஆன்டனி. இவரது இசைக்கு தனியாக ஆடியன்ஸ் காணப்படுகின்றனர். பெரும்பாலும் சிறப்பான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இவர் தனது படங்ளுக்கு தந்து விடுவார்.

கொலை படத்தின் தமிழ் டைட்டில்

இந்நிலையில் பாலாஜி குமார் இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் டைட்டிலை இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் ஆன்டனி வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

தமிழ் டைட்டில்

தமிழ் டைட்டில்

கடந்த விஜயதசமி அன்று இந்தப் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்ட நிலையில் இன்றைய தினம் அதிகாரப்புர்வமாக தமிழ் டைட்டிலை வெளியிட்டுள்ளார் விஜய் ஆன்டனி. படத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜூன் சிதம்பரம் முரளி சர்மா உள்ளிட்டவர்கள் நிடித்து வருகின்றனர்.

Recommended Video

நான் காதலித்த ஒரே நடிகர் | Actress Aishwarya Exclusive | Filmibeat Tamil
சுவாரஸ்யமான தலைப்பு

சுவாரஸ்யமான தலைப்பு

விஜய் ஆன்டனி படங்களில் தலைப்பு எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் அமையும். அதேபோல இந்த டைட்டிலும் வித்தியாசமான ஆர்வத்தை தூண்டும்வகையில் அமைந்துள்ளது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசாகும் விஜய் ஆன்டனி படங்களின் பட்டியலில் கொலை படமும் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X