நிலா.. செவ்வாய்னு போன மனுஷனுக்கா இப்படி ஒரு நிலை.. விஜய் ஆண்டனி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி கொரோனா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

கோர தாண்டவமாடும் கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Vijay Antonys Corona Awareness Video

இதனால், பல நடிகர், நடிகைகள் வீடுகளிலேயே உள்ளனர். பலர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விஜய் ஆண்டனியும் தற்போது கொரோனா பற்றிய தனது சிந்தைகளையும், பார்வையையும் நாம் செய்ய வேண்டியவற்றையும் பற்றி வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த காணொளியில் விஜய் ஆண்டனி பேசும் போது, மனுஷன் நிலாவுக்கு போவான் செவ்வாய் கிரகத்துக்கு போக போறானு தான் நினைச்சிட்டு இருந்தோம். ஆனால், மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமையை யாரும் எதிர்பார்க்கவே இல்லை கொரோனா இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார் .

Vijay Antonys Corona Awareness Video

இந்த நேரத்தில் நாம் அனைவரும் கொரோனா எப்படி உருவானது, எப்படி பரவியது, தற்போதைய நிலை என்ன, அதன் புரிதல் என்னென்ன என்று அனைத்தையும் கூகுள் செய்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. ஏனெனில் தற்போதைய நிலைக்கு மிக முக்கியமான விஷயம் விழிப்புணர்வு தான் என்று கூறியுள்ளார்.

மேலும் நமக்காக தான் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை மறந்து இரவு பகலாக தங்களின் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் அலட்சியமாக வெளியே செல்வது என்பது மிகவும் தவறு என்றும் கூறியுள்ளார்.

Vijay Antonys Corona Awareness Video

தற்போதைய நிலையில் வீடில்லாத ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுங்கள் உங்களிடம் எது வேண்டாம் என்று இருக்கிறதோ அவர்களுக்கு கொடுங்கள் அல்லது ரோட்டின் ஓரத்தில் வைத்து செல்லுங்கள் இந்த நேரத்தில் அது பெரிய உதவியாக இருக்கும் என்று மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி .

Vijay Antonys Corona Awareness Video

Recommended Video

'சேது இல்லாமல் என் வாழ்க்கை நார்மலாக இருக்க போவதில்லை'-அஸ்வின் விஜய்

கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் மக்களின் மனநிலையும் மாறி வருகிறது. இந்த இடத்தில் விஜய் ஆண்டனி ஏழைகளுக்கு உதவ சொல்லியிருப்பது மக்களின் பாராட்டை பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X