வித்தியாசமான தலைப்பில் விஜய் ஆன்டனி நடிக்கும் படம்... சலீம் படத்தின் தொடர்ச்சி!

சென்னை : விஜய் மில்டன் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் விஜய் ஆன்டனி நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு வித்தியாசமான தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி

நடிகர் விஜய் ஆன்டனி சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சில படங்களை தயாரித்தும் அடுத்த நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடித்து வருகிறார். தன்னுடைய படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் மில்டன் இயக்கம்

விஜய் மில்டன் இயக்கம்

இந்நிலையில் விஜய் மில்டன் எழுதி இயக்கிவரும் படத்தில் விஜய் ஆன்டனி தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் உள்ளிட்டட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டில் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சலீம் படத்தின் தொடர்ச்சி

சலீம் படத்தின் தொடர்ச்சி

இந்தப் படம் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடித்த சலீம் படத்தின் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. சலீம் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதன் அடுத்தபாகம் உருவாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை பிடிக்காத மனிதன் படம்

மழை பிடிக்காத மனிதன் படம்

தற்போது இந்தப் படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஒளிப்பதிவையும் விஜய் மில்டன் மேற்கொண்டுள்ளார். படத்தில் மேகா ஆகாஷ் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சரத்குமார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாடல்களுக்கு இசையமைக்கும் விஜய் ஆன்டனி

பாடல்களுக்கு இசையமைக்கும் விஜய் ஆன்டனி

படத்தில் மேலும் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். பின்னணி இசையை அச்சு ராஜாமணி மேற்கொண்டுள்ளார். படத்தை இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Recommended Video

Jai Bhim Slapping Controversy | நான் செய்தது சரி Prakash Raj விளக்கம்
சலீம் படத்தின் தொடர்ச்சி

சலீம் படத்தின் தொடர்ச்சி

இசை, நடிப்பு, இயக்கம், எடிட்டிங் என பன்முகத்திறமை கொண்டவராக உள்ள விஜய் ஆன்டனி நான் படத்தின் தொடர்ச்சியாக சலீம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டுக்குள்ளானது. இந்நிலையில் சலீம் படத்தின் இரண்டாவது பாகம் அதிலும் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாக இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X