“மீ டூ -வில் மாட்டாத அளவுக்கு ரொமான்ஸ் டிரெயினிங்”... விஜய் ஆண்டனியின் புதிய திட்டம்!

மீடூ பிரச்சினையில் சிக்காத அளவுக்கு ரொமான்ஸ் பயிற்சி எடுக்க முடிவு செய்துள்ளாராம் விஜய் ஆண்டனி.

சென்னை : மீ டூ -வில் மாட்டாத அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் திமிரு புடிச்சவன். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ரிலீசாக வெளிவர இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.

பங்களிப்பு:

பங்களிப்பு:

அதில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, "தனி மரம் தோப்பாகாது எனச் சொல்வார்கள். அதுபோல, திமிரு பிடிச்சவன் படம் என்னுடைய உழைப்பு மட்டுமல்ல, பலருடைய பங்களிப்பு இருக்கிறது.

உண்மையான ஹீரோக்கள்:

உண்மையான ஹீரோக்கள்:

பொதுவாக என்னுடைய இயக்குநர்கள் தான் என் படங்களின் உண்மையான ஹீரோக்கள். அவர்கள் சொல்வதை நான் நடித்து விட்டு செல்கிறேன். மற்றபடி அனைத்துமே அவர்களுடைய பணி தான்.

தீபாவளி ரிலீஸ்:

தீபாவளி ரிலீஸ்:

இப்படத்தை நான் ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறேன் என்ற கேள்வி பலரது மனதில் உள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. நான் யாருடைய வம்பு தும்பிற்கும் செல்ல மாட்டேன். ஆனால், வந்த வம்பையும்விட மாட்டேன். படத்தின் கதை தீபாவளியை ஒட்டிய கதைக்களம். அதனால் இயக்குநரின் ஆசைப்படி, தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.

ரொமான்சுக்கு பயிற்சி:

ரொமான்சுக்கு பயிற்சி:

எனக்கு ரொமான்சே வர மாட்டேன் என்பது தான் பலரது விமர்சனமாக இருக்கிறது. இதனால் அடுத்தடுத்த படங்களில் ரொமான்சுக்கு அதிகப் பயிற்சி எடுக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், அது மீடூவில் மாட்டாத அளவிற்கு இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X