'நூறு சாமி’ சுவாசிகா மீது விஜய் ஆண்டனி கோபம்.. காரணம் மோகன்லால்.. என்னங்க சொல்றீங்க!
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷன், பாலாஜி சக்திவேல், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 19ம் தேதி நூறு சாமி திரைப்படம் வெளியானது. ஆரம்பத்தில் மந்தமான வசூல் நிலவிய நிலையில், போக போக படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பட்ஜெட்டை விட அதிக தொகையை வசூல் செய்து படக்குழுவை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிச்சைக்காரன் அளவுக்கு படம் வெற்றிப் பெறும் என்றும் அதிக வசூல் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தளவுக்கு ஓடவில்லை என்றாலும், ஃப்ளாப் ஆகாமல் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்துக்காக நடிகை சுவாசிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொல்றாங்களே என ரசிகை ஒருவர் சக்சஸ் மீட்டின் போது கேள்வி எழுப்ப, தனக்கு சுவாசிகா மீது கோபம் என விஜய் ஆண்டனி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
நூறு சாமி வசூல்: 12 கோடி பட்ஜெட்டில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளியான நூறு சாமி திரைப்படம் இதுவரை 13 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுவாசிகாவின் நடிப்புக்கு தேசிய விருது கொடுத்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி படத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். விஜய் ஆண்டனியும் காலில் செருப்பு அணியாமல் வழக்கம் போல தொடர்ந்து ஒவ்வொரு ஊருக்காக சென்று நூறு சாமி படத்தை புரமோட் செய்தும் அதன் வெற்றியையும் கொண்டாடி வருகிறார்.
சுவாசிகா மீது கோபம்: நூறு சாமி படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் விஜய் ஆண்டனி மற்றும் சசி கொண்டாடிய நிலையில், சுவாசிகா வரவில்லை. இந்நிலையில், சுவாசிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும்னு பேசிக்கிறாங்க என ரசிகை ஒருவர் சொல்லும் போது, அவர் மீது எனக்கு ரொம்பவே கோபம் என்றும் அதற்கு காரணம் மோகன்லால் என்றும் விஜய் ஆண்டனி செம ஜாலியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன்லால், சுவாசிகா டான்ஸ்: நூறு சாமி படத்தில் 42 வயது அம்மாவாக 34 வயதான நடிகை சுவாசிகா திறம்பட நடித்து அசத்திய நிலையில், பலரும் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். மறுமணம் செய்துக் கொள்ளாமல் கணவனை இழந்து வாடும் பெண்கள் எல்லாம் கண்ணீர் விட்டுக் கதறி அழும் காட்சிகளை பார்த்து சுவாசிகாவும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார். நூறு சாமி செல்வி கதாபாத்திரத்தில் இருந்து மனதளவில் மாற மோகன்லால் உடன் கவர்ச்சி டான்ஸ் போட்ட வீடியோ வெளியான நிலையில், அதை வைத்து விஜய் ஆண்டனி கலாய்த்து பேசிய காட்சிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளன.


Click it and Unblock the Notifications