ஊரெல்லாம் கொரோனா வைரஸ் பீதி.. இந்த லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி!
சென்னை: இந்த லாக்டவுன் நேரத்தை எப்படி செலவிடுகிறேன் என்று இசை அமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
Recommended Video
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'தமிழரசன்' படம் முடிந்துவிட்டது. லாக் டவுனுக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

அகினிச் சிறகுகள்
இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்து வரும் அகினிச் சிறகுகள். மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். அருண் விஜய், விஜய் ஆண்டனி ஹீரோக்களாக நடிக்கின்றனர். அக்ஷரா ஹாசன், இந்தி நடிகை ரைமா சென், சென்ராயன், தயாரிப்பாளர் ஜேஎஸ்கே, நாசர், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஆனந்த கிருஷ்ணா
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இதற்கிடையே 'வாய்மை' செந்தில்குமார் இயக்கும் காக்கி படத்தில் நடிக்கிறார். இதில் சத்யராஜ், ஶ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதையடுத்து ஆனந்த கிருஷ்ணா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தப் படங்களின் ஷூட்டிங் கொரோனா காரணமாகத் தடைபட்டுள்ளது.

உலக நாடுகள்
சீனாவில் உருவான இந்த வைரஸ், மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி இருக்கிறது. இந்த வைரஸ், இப்போது இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றுகாரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.
#CORONA 👺🔥 @mrsvijayantony @vijayantonyfilm @FvInfiniti pic.twitter.com/SYq1i49Rjy
— vijayantony (@vijayantony) March 27, 2020
பொதுமக்கள்
இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அவர்கள் இந்த நேரத்தில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இசையில் கவனம்
இந்நிலையில், விஜய் ஆண்டனியிடம் பேசினோம். அவர் கூறும்போது, வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்ததால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் இருந்தேன். இப்போது அதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனால் அவர்களுடன் நேரத்தைச் செலவழிக்கிறேன். அதோடு, இசையிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.

பிசியாகவே
சில அருமையான ட்யூன்களை உருவாக்கி இருக்கிறேன். சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.. அவற்றைக் கற்று வருகிறேன். எடிட்டிங் தொடர்பான வேலைகளையும் செய்து வருகிறேன். இதனால் எப்போதும் என்னை பிசியாகவே வைத்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











