பிலிம்பேர் விருது: தனுஷுக்கு பூங்கொத்து அனுப்பி, போன் மூலம் பாராட்டிய விஜய்
சென்னை: இந்தியில் சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற தனுஷுக்கு இளையதளபதி விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பார்க்க சுள்ளான் போன்று இருக்கும் தனுஷ் நாளுக்கு நாள் நடிப்பில் கலக்கி வருகிறார். அதனால் அவரைத் தேடி விருதுகளும் வந்து சேர்கிறது. இத்தனை ஆண்டுகளாக தமிழ் படங்களில் மட்டுமே நடித்த தனுஷ் பாலிவுட் பக்கமும் சென்றார்.
சோனம் கபூருடன் சேர்ந்து ராஞ்ஹனா படத்தில் நடித்தார்.

யாரப்பா இது?
பாடியை டெவலப் பண்ணி ஷோ காட்டும் நடிகர்கள் மத்தியில் நடிப்பை மட்டுமே நம்பிச் சென்ற தனுஷை இந்தி ரசிகர்கள் இருகரம் நீட்டி வரவேற்றார்கள்.

ரூ. 100 கோடி
தனுஷின் நடிப்பை பாலிவுட் மட்டும் இன்றி விமர்சகர்களும் கொண்டாடினர். அவரின் முதல் இந்தி படமே ரூ. 100 கோடி வசூல் செய்தது.

பிலிம்பேர் விருது
ராஞ்ஹனா படத்திற்காக தனுஷுக்கு சிறந்த புதுமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. முதல் படத்திலேயே மக்கள் மனதோடு சேர்த்து விருதையும் வென்றுவிட்டார்.

விஜய்
தனுஷுக்கு விருது கிடைத்தவுடன் விஜய் அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்ததுடன் போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











