தானாக விரும்பிக் கேட்டு ‘கேஜிஎஃப்’ பார்த்த முன்னணி நடிகர்.. பாராட்டும் கிடைத்ததால் படக்குழு ஹேப்பி!
கே.ஜி.எஃப். சிறப்புக்காட்சி பார்த்து விட்டு நடிகர் விஜய் பாராட்டியதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தைப் பார்த்து விட்டு படக்குழுவை நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடித்திருந்த படம் "கே.ஜி.எஃப்". கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதீயாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் வெளியானது. இப்படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்தது.
இந்நிலையில், இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அறிந்த விஜய், தானும் கே.ஜி.எஃப் படத்தைப் பார்க்க விரும்பியுள்ளார். இதனால், சென்னையில் அவருக்கு படத்தை பிரத்யேகமாக படக்குழு திரையிட்டது.

படத்தை பார்த்த நடிகர் விஜய், 'கே.ஜி.எஃப்" படம் எடுக்கப்பட்ட விதம் பிரம்மாண்டமாகவும், நடிகர்களின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளதாக' பாராட்டியுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜயின் இந்த பாராட்டால் "கே.ஜி.எஃப்" படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











