கடப்பா தர்காவில் பிரார்த்தனை செய்த விஜய், ஏ.ஆர். முருகதாஸ்
ஹைதராபாத்: கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுடன் சேர்ந்து கடப்பா தர்காவுக்கு சென்றுள்ளார்.
விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்து வருகிறார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அவர்கள் கடப்பாவில் உள்ள பிரபல தர்கா பற்றி கேள்விப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த தர்காவுக்கு செல்ல விஜய்யும், முருகதாஸும் தீர்மானித்தனர்.

தர்கா
கடப்பா தர்காவுக்கு விஜய், முருகதாஸுடன் சென்றார். அவர்கள் முஸ்லீம்களை போன்று தொப்பி அணிந்து சென்றனர்.

விஜய்
தொப்பி அணிந்து விஜய் தர்காவுக்குள் சென்றபோது எடுத்த படம்.

பிரார்த்தனை
தர்காவில் விஜய் பிரார்த்தனை செய்தார். ஒரு வேளை கத்தி படம் ஹிட்டாக வேண்டும் என்று வேண்டி இருக்கலாம்.

முருகதாஸ்
கடப்பா தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தது மனதிற்கு நிம்மதியாக இருந்ததாக இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்
முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடப்பா தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜ்மீர் தர்கா
பாலிவுட் நடிகர், நடிகைகள் தங்களின் படங்கள் வெற்றி பெற அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம்.


Click it and Unblock the Notifications











