GOAT கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு.. சென்னை திரும்பினார் விஜய்.. அடுத்த பிளான் என்ன?

சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன்முறையாக விஜய்யை இயக்குகிறார் வெங்கட் பிரபு. அவர் எப்போது தனது மேக்கிங்கையும், திரைக்கதையையும் வித்தியாசமாகவும், ஜாலியாகவும் கொடுப்பவர் என்பதால் நிச்சயம் அவரது ஸ்டைல் விஜய்க்கு க்ளிக் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய் சென்னை திரும்பியிருக்கிறார்.

லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். நிச்சயம் அவருக்கு இந்தப் படம் மாஸ் ரீ எண்ட்ரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் படம் பற்றிய ஆவலை தூண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay arrived in Chennai from America last night here are the details

எப்போது ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும்படி வெங்கட் பிரபு பிளான் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி GOAT படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கண்டிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு GOAT படம் திருவிழா போல் கொண்டாடப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஷூட்டிங் அப்டேட்: படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்று கூறப்பட்டது. ஆனால் அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ரஷ்யாவுக்கு சென்றது. அங்கு வைத்து முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஷ்யாவில் நடந்த ஷூட்டிங்தான் இறுதிக்கட்ட ஷூட்டிங் ஆகும். அதனை முடித்த வெங்கட் பிரபு படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். முன்னதாக இந்தப் படத்தில் கிராஃபிக்ஸுக்கு அதிக பங்கு இருக்கும் என்று வெங்கட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கு சென்ற விஜய்: ரஷ்ய ஷெட்யூலை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விஜய்; அடுத்ததாக கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்காவுக்கு சில வாரங்கள் முன்பு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. அதனையடுத்து லாஸ் வெகாஸுக்கு சென்ற படக்குழு அங்கு வைத்து விஜய் சம்பந்தமான கிராஃபிக்ஸ் பணிகளை மேற்கொண்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.

சென்னை வந்த விஜய்: இந்நிலையில் தனக்கு சம்பந்தமான கிராஃபிக்ஸ் பணிகள் முடிந்துவிட்டதால் விஜய் நேற்று இரவு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து குட்டி ரெஸ்ட் எடுக்கவிருக்கும் அவர்; தொடர்ந்து GOAT படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபடுவார் என்றும்; தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பிப்பார் என்றும் திரைத்துறையில் குரல்கள் கேட்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X