கஸ்தூரி பாய் நகருக்கு எப்படி போகணும்.. தன்னுடைய வீட்டுக்கே வழி கேட்ட விஜய்.. த்ரோபேக் வீடியோ!
சென்னை: நடிகர் விஜய் சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமின்றி தன்னுடைய ஏரியா மக்களுடனும் அடிக்கடி செம ஜாலியாக ரகளை செய்வது வழக்கம் எனக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் விஜய் வளர்ந்து வரும் காலக் கட்டத்தில் தனது வீட்டின் அட்ரஸ் சொல்லி அங்கே உள்ளவர்களிடம் வழி கேட்கும் ஒரு ரேர் வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் என்பது மாறி விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் என சொல்லும் அளவுக்கு தனது உழைப்பால் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தளபதி விஜய்.

ரொம்பவே சைலன்ட் ஆனவர் அதிகம் பேச மாட்டார் என்றெல்லாம் விஜய் குறித்து சீனியர் நடிகர்கள் தான் சொல்வார்கள். ஆனால், அவருடைய நண்பர்களுக்குத் தான் தெரியும் விஜய் எந்தளவுக்கு சேட்டை பிடித்த மனிதர் என்று எனக் கூறுகின்றனர்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்த படத்தில் இதுவரை விஜய்யுடன் இணைந்து நடிக்காத சில முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்த சில நடிகர்களும் இணைந்து வெறித்தனமான ஆக்ஷன் படமாக வெங்கட் பிரபு உருவாக்கி வருகிறார். டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் மோகன் இருவருமே படத்தில் நெகட்டிவ் ரோல் என சொல்லப்படுகிறது. மேலும், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, ஜெயராம், மீனாக்ஷி சவுத்ரி, பிரேம்ஜி என நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

வெளியே வந்து கையசைத்தால்: சமீபத்தில் அம்பத்தூர் அருகே கோட் படத்தின் சூட்டிங் நடைபெற்ற நிலையில், மீசை இல்லாத லுக்கில் நடிகர் விஜய் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைக்க ஒரு பெரிய கூட்டமே தினம் தோறும் தளபதியை பார்க்க திரண்டு விட்டது. ரசிகர்களுக்காக கேரவன் மீது ஏறி நின்று சில தினங்கள் காட்சி தந்து பொங்கல் விடுமுறையை கொண்டாட வைத்திருந்தார்.
தளபதி டு தலைவர்: நடிகர் விஜய் இளைய தளபதியில் இருந்து தளபதியாக அப்கிரேட் ஆனார். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என சொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தளபதியில் இருந்து தலைவராக அப்கிரேட் ஆக அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறார். தமிழக முன்னேற்ற கழகம் என விஜய்யின் கட்சி பெயர் இதுதான் என ஒரு தகவல் பரவி வருகிறது. கோட் டைட்டில் லீக்கானது போலவே கட்சியின் பெயரும் லீக் ஆகி விட்டதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் வீடு அங்க தான் இருக்கா?: தனலட்சுமி அவென்யூ, கஸ்தூரி பாய் நகருக்கு எப்படி செல்வது என ஹெல்மட் அணிந்த தலையுடன் நடிகர் விஜய் அடையாளம் தெரியாமல் ரோட்டோரத்தில் நின்று கொண்டிருக்கும் சில பொதுமக்களிடம் வழி கேட்கிறார். பின்னர், அங்கே தான் விஜய் வீடு இருக்கா என்றும் கேட்கிறார். ஆனால், அவர்கள் விஜய்யை அடையாளம் கண்டுக்கொள்ளவே இல்லை. அந்த த்ரோபேக் வீடியோவை தற்போது விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். விஜய் டிவியின் ஸ்டாருடன் ஒரு நாள் நிகழ்ச்சிக்காக பல ஆண்டுகளுக்கு முன்னதாக இது நடத்தப்பட்ட ஷோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இப்போ இப்படி வந்து விஜய் கேட்டா அங்கே ஒரு பெரிய கூட்டமே கூடிவிடும் என்றும் ரசிகர்கள் விஜய்யின் குறும்புத்தனத்தை ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











