பாடல் பிடிக்கவில்லை .. மாற்றச் சொல்லி கட்டளையிட்ட விஜய்!
சென்னை : ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டி தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய்
இப்பொழுது டாக்டர் இயக்குனருடன் இணைந்த பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய படத்திற்கு இசையமைத்த பாடல் பிடிக்கவில்லை என மாற்றச் சொல்லி கட்டளை இட்டுள்ளார் விஜய்.

கல்லூரி ப்ரொஃபஸராக
தனது ஒவ்வொரு படங்களின் வெற்றிகளின் மூலம் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று உலக அளவில் வசூல் சாதனை செய்தது இந்த படத்தில் விஜய் முதல் முறையாக கல்லூரி ப்ரொஃபஸராக நடித்திருப்பார். மேலும் வில்லனாக நடிகர் விஜயசேதுபதி மிரட்டியிருந்தார் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். மாஸ்டர் மிக வித்தியாசமான விஜய் இதுவரை நடித்த திரைப்படங்களிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்

செல்வராகவன்
படப்பிடிப்பு முடிந்து இப்பொழுது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சில படங்களில் மட்டுமே
தனது ஒவ்வொரு படங்களும் புது புது கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் விஜய், இந்திய இசையை ஆஸ்கருக்கு கொண்டு சேர்த்த இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் விஜய் ஒரு சில படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார். அதில் முதல் முறையாக ஏ ஆர் ரகுமான் மற்றும் விஜயின் இணைந்த திரைப்படம் உதயா.

இரட்டை வேடத்தில்
உதயா படம் சரியாக ஓடவில்லை இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான பாடல்களும் அந்த அளவிற்கு ஹிட்டாகவில்லை. முதல் படத்திலேயே இருவருக்கும் செட் ஆகவில்லை என நீண்ட வருடங்களாக இணைந்து பணியாற்றாமல் இருந்த இந்த கூட்டணி அழகிய தமிழ் மகன் மூலம் இணைந்தது. இந்த படத்தில் விஜய் குரு மற்றும் பிரசாத் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இயக்குனர் பரதன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
Recommended Video

பாடல் பிடிக்கவில்லை
இந்த படத்திற்கு இசையமைத்தார் ஏ ஆர் ரகுமான் அதன் இன்றோ பாடலை இயக்குனர் பரதன் விஜய்யிடம் போட்டு காட்டியுள்ளார். அந்த பாடலைக் கேட்ட விஜய் தனக்கு பிடிக்கவில்லை எனவும் பாடலை மற்ற சொல்லியும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூறியுள்ளார். இந்த நிலையில் தயக்கத்துடன் சென்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இன்ரோ பாடல் விஜய்க்கு மட்டுமல்ல தங்களுக்கும் பிடிக்கவில்லை என தங்களுடைய பேரையும் சேர்த்துக் கொண்டு பாடலை மாற்றச் சொல்லி கேட்டுள்ளனர்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே
அன்றே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கவிஞர் வாலியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எழுதிய பாடல் தான் "எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே'. எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே பாடலை விஜய் கேட்டவுடன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் தெரிந்ததாக பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











