ஹலோ.. யாருது பா இந்த ஃபோன்?.. கூட்டத்திற்கு மத்தியில் விஜய் செய்த சம்பவம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் நீலாங்கரை தொகுதிகள் தனது வாக்கினை பதிவு செய்தார். விஜயை பார்ப்பதற்காக அங்கு ஏராளமானவர்கள் கூடி இருந்ததால் கூட்டத்தில் ஒரு தரமான சம்பவம் நடந்துள்ளது. அந்த நேரத்திலும் விஜய் பண்புடன் நடந்து கொண்டார் என்று விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் வீடியோ டிரெண்டாக்கி வருகின்றனர்.

கூட்ட நெரிசலில்: தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. காலை முதல் மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், நீலாங்கரை தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்ய விஜய் வருகை தந்தார். அவரை நேரில் பார்க்க கட்சித் தொண்டர்களுடன் ரசிகர்களும் பெருமளவில் திரண்டதால், வாக்குச்சாவடி வளாகத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Vijay Neelangarai Voting

தரமான சம்பவம்: இந்த நெரிசலின் மத்தியில் பாதுகாப்பு பணியாளர்கள் அவரை பாதுகாப்பாக வழிநடத்தி செல்லும் போது, அருகில் இருந்த ஒருவரின் செல்போன் கீழே விழுந்தது. அதைக் கவனித்த விஜய் உடனே குனிந்து அந்த செல்போனை எடுத்துக் கொண்டு, "ஹலோ... யாருது பா இந்த போன்?" என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்தவர் "அண்ணே, என்னோட போன் தான்" என்று கூறியதும், அவர் அந்த போனை உரியவரிடம் ஒப்படைத்தார். கூட்ட நெரிசலான சூழ்நிலையிலும் விஜய் அமைதியாகவும் எளிமையாகவும் நடந்துகொண்ட இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. "இதுதான் நம்ம தலைவர் விஜய்" என அவரது ரசிகர்கள் பெருமையுடன் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

கூடுதல் பரபரப்பு: விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதுடன், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் தானும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களின் ஆதரவு அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால், இந்த தேர்தல் அரசியல் ரீதியாக கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more about: vijay voting விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X