ராஜமெளலி, அட்லியால கூட இப்படியொரு ஃபிரேம் வைக்க முடியாது.. முருகன் அருளால் நினைத்ததை முடிப்பாரா விஜய்?
சென்னை: தேர்தல் முடிந்த பிறகு உதயநிதி, மு.க. ஸ்டாலின் எல்லாம் வெளியே ஜாலியாக நடமாடி வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யை ஆளே காணோமேப்பா என திமுகவினர் கிண்டலடித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு மதுரையிலும், இன்று அதிகாலை திருச்செந்தூரிலும் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார் விஜய்.
சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக மாறிய விஜய் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து கோலிவுட்டில் உச்சம் தொட்டார். ரஜினிகாந்துக்கு முன்னதாக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகராக விஜய் மாறினார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத பிரச்னை வெடித்துள்ளது என்றும் ஷேர் அடிப்படையில் படம் வெற்றிப் பெற்றால் வாங்கிக்கோங்க என தயாரிப்பாளர்கள் மற்ற நடிகர்களுக்கு சொல்லும் நிலைமை விஜய் சினிமாவை விட்டு வெளியேறியதும் வந்துள்ளது.
மிட் நைட்டில் மதுரையில்: தவெக தலைவர் விஜய் ஜாலி டூர் செல்லாமல் ஆன்மிக சுற்றுலா கிளம்பியுள்ளார். மதுரையில் நேற்று நள்ளிரவு விஜய் அந்த சாலை மார்க்கமாக திருச்செந்தூருக்கு வருகிறார் என்கிற செய்தி அறிந்த நிலையில், நள்ளிரவு 1 மணி அளவில் மக்கள் கூட்டம் அலைமோத, அவர்களை காருக்கு வெளியே வந்து சந்தித்து கை அசைத்துவிட்டுச் சென்றார்.
திருச்செந்தூரில் சாமி தரிசனம்: கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் அனைத்து கோயில்களிலும், சுற்றுலா தளங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. அதனால், அதிகாலையில் திருச்செந்தூர் முருகனை சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார் தவெக தலைவர் விஜய். அதன் காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஃப்ரேம் பாருங்க ஜி: ராஜமெளலி, அட்லியால் கூட இப்படியொரு அட்டகாசமான ஃப்ரேமை வைக்க முடியாது என திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்துக்கு முன்பாக தனது காரில் இருந்து விஜய் இறங்கி வரும் போது பேக்கிரவுண்டில் கோபுரமும் அதில் உள்ள வேலும் வேலாயுதத்தை வரவேற்பதை பாருங்க என விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பாரா?: விஜய்க்கு பல இடங்களில் இருந்து பாசிட்டிவான செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் தான் சந்தோசமாக வெளியே வந்துள்ளார் என்கின்றனர். வரும் மே 4ம் தேதி விஜய் நினைத்ததை முடிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போதே காலண்டர் எல்லாம் அடிக்க ஆரம்பித்து விட்டனர். விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இப்போதே விஜய் தான் முதல்வர் என கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
ஜனநாயகன் சென்சார்: தேர்தல் முடிந்த பின்னரும் கூட முழுவதுமாக இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்தை பார்த்து சென்சார் தராமல் ரிவைசிங் கமிட்டி தொடர்ந்து இழுத்தடிப்பது சரியான முன்னுதாரணமாக இருக்காது என்றும் வழக்கு வாபஸ் வாங்கிய உடனே ஜன நாயகன் சென்சார் சான்றிதழ் கொடுத்திருந்தால் லீக் பிரச்னையே வராது என்கின்றனர். நேற்றும் ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்காமல் காலம் தாழ்த்தி வருவது ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications