ஜனநாயகன் லீக் ஆனது குறித்து விஜய்யிடம் நீட்டப்பட்ட மைக்.. இப்போ கூட மீடியாவை அவாய்ட் பண்ணுவது ஏன்?
சென்னை: விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இன்னமும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், ரிலீஸ் ஆகாமல் உள்ளது. ஆனால், திடீரென சில விஷமிகள் பார்த்த வேலை காரணமாக சோஷியல் மீடியாவில் ஜன நாயகன் படம் லீக் ஆகி அதனை ஏகப்பட்ட நெட்டிசன்கள் மற்றும் விஜய் ஹேட்டர்கள் அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கினர்.
ஆரம்பத்தில் முதல் 5 நிமிட காட்சிகள் மட்டுமே லீக் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில், மொத்தம் 3 மணி நேரம் 2 நிமிடம் படமும் லீக் ஆனது படக்குழுவையும் திரையுலகையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி, சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஷால் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் ஜன நாயகன் படம் லீக் ஆனதற்கு எதிரான கண்டனங்களை பதிவிட்டு வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோ விஜய் இதுவரை ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பதை தாண்டி அதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் விஜய்யிடம் நேரடியாக மைக்கை நீட்டி கேட்கும் போது கூட விஜய் எந்தவொரு பதிலும் அளிக்காமல் சென்றது பலரையும் அப்செட் ஆக்கியுள்ளது.
கடும் கோபத்தில் விஜய்: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மக்கள் விஜய்க்கு கொடுத்த உற்சாகத்தில் சும்மா சிங்கம் போல மனுஷன் கர்ஜித்தார். ஜன நாயகன் படத்தை முடக்கப் பார்க்கின்றனர் என்றும் மைக் பிடித்து பேசினார். ஆனால், இன்று காரைக்குடிக்கு பிரச்சாரம் செய்ய வந்த விஜய் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கடுகடுத்த முகத்துடன் கடும் கோபத்தில் இருந்ததை காண முடிந்தது. ஜன நாயகன் படத்தையும் வேண்டுமென்றே லீக் செய்து விஜய்யை மொத்தமாக முடிக்க யாரோ சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்கின்றனர்.
விஜய்க்கு ஆபத்து: தொடர்ந்து விஜய் மக்கள் கொடுக்கும் ஜூஸ் உள்ளிட்டவற்றை வாங்கிக் குடித்து வருகிறார். மக்களுடன் மக்களாக பயணித்து வருகிறார். விஜய்யின் கால் தரையில் இறங்கவில்லை என நேற்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்த நிலையில், இன்று கீழே இறங்கி சைக்கிள் எடுத்து ஓட்டி கூட்ட நெரிசல் காரணமாக தடுமாறியும் விழுந்துவிட்டார். தேர்தலுக்குள் விஜய்யின் உயிருக்கே கூட ஆபத்து நேரும் சூழல் அதிகமாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஜனநாயகன் லீக் கேள்வியும் விஜய் மெளனமும்: ஜன நாயகன் படம் லீக் ஆனது குறித்து ஒட்டுமொத்த திரைத்துறையே நேற்று இரவு முதல் இன்று மாலை வரை தங்கள் எதிர்ப்பையும் விஜய் மற்றும் படக்குழுவுக்கு ஆதரவையும் அளித்து வருகின்றனர். ஆனால், அதுதொடர்பான கேள்வியை கேட்கும் போது விஜய் அமைதியாக கடந்து செல்வது ஏன் என்றும் படத்தில் மட்டும் மீடியா முன்னின்று விஜய் பேசுவது போல காட்சிகள் வைத்து விட்டு நிஜத்தில் மீடியாவை விஜய் இன்னமும் புறக்கணிப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், விஜய்யின் பவுன்சர்கள் கேள்விக் கேட்ட பத்திரிகையாளர்களை தாக்கியதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











