'ஜில்லா' பிரச்சனையை தீர்த்து வைத்த விஜய்
சென்னை: ஜப்பானில் ஜில்லா படக்குழுவுக்கு பிரச்சனை ஏற்பட்டபோது அதை இளையதளபதி விஜய் தான் தீர்த்து வைத்துள்ளார்.
நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
ஜில்லா படத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றார்கள் என்று நாங்கள் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படி ஜப்பான் சென்றபோது படக்குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டது பற்றி தற்போது பார்ப்போம்.

ஒசாகா
ஜில்லா குழு ஜப்பானின் ஒசாகாவை அடைந்தபோது படப்பிடிப்பை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டார்களாம். நிலநடுக்கம் ஏற்படலாம், கன மழை பெய்யலாம் என்று அஞ்சப்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டதாம்.

பேசித் தீர்த்த விஜய்
படப்பிடிப்பை தள்ளி வைத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டமாகிவிடுமே என்று படக்குழுவினர் கவலைப்பட்டுள்ளனர். அப்போது நிலைமையை புரிந்து கொண்ட விஜய் அதிகாரிகளிடம் பேசி படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுக் கொடுத்தாராம்.

செலவுகள்
ஜப்பானில் ஜில்லா குழுவுக்கு பணப் பிரச்சனை ஏற்பட்டதாம். அப்போது கூடுதல் செலவுகளை விஜய் ஏற்றுக் கொண்டாராம்.

நிம்மதி
விஜய் அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்கிக் கொடுத்தது படக்குழுவினரையும், தயாரிப்பாளரையும் நிம்மதி அடைய வைத்துள்ளது. மேலும் அவர் கூடுதல் செலவுகளை ஏற்றதை பார்த்து படக்குழுவினர் உருகிவிட்டனராம்.


Click it and Unblock the Notifications











