விஜய்க்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் அளிக்கும் விழா திடீர் ரத்து...: வேறொரு நாளில் நடத்த முடிவு
சென்னை: தமிழக அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் தர மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டனர்.
தமிழகத்தில் உள்ள பிரபலமான வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நடத்திய மெகா கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றார். இதையடுத்து விஜய் அந்த பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் விஜய் அண்ணா என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மதுரை
மதுரையில் ஆகஸ்ட் 15ம் தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் விஜய்க்கு அடுத்த சூப்பர்ஸ்டார் பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்திய பிரபலங்கள்
இந்த பிரமாண்ட விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கூறப்பட்டது.

விஜய் அழைப்பு
தனக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டும் விழாவுக்கு வருமாறு விஜய்யும் பல பிரபலங்களை செல்போன் மூலம் அழைத்தார்.

ரசிகர்கள்
இத்தனை நாட்களாக இளைய தளபதியாக இருந்த விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக பார்க்க அவரது ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

குட்டீஸ்
விஜய்க்கு இளவட்டங்கள் தவிர்த்து பெரியவர்கள் முதல் குட்டீஸ் வரை ரசிகர்கள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்து
விழா நாளை நடக்கும், விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் திடீர் என்று விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இல்லை
மதுரையில் விழா நடத்த தமிழக அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தான் விழாவை ரத்து செய்துள்ளனர். மேலும் விழாவை வேறொரு நாளில் நடத்த விஜய் தரப்பும், பத்திரிக்கை நிர்வாகமும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











