விஜய் படம் - மல்லுவுட் 'டர்'
| Click here for more images |
ரஜினி படம் வெளியானால் தமிழகத்தில் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் கூட பெரிய பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்யாமல் தள்ளி வைப்பார்கள்.
ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் படங்களுக்கு கேரளாவில் அந்த வகையிலான மவுசு கிடைக்க ஆரம்பித்துள்ளது. விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருப்பதால் அவரது படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் தங்களது படங்களை திரையிட சூப்பர் ஸ்டார் நடிகர்கள் தயங்குகிறார்களாம்.
விஜய்யின் அழகிய தமிழ் மகன் கேரளாவிலும் தீபாவளியையொட்டி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்திற்கு அங்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால், சூப்பர் ஸ்டார் நடிகர்கள், தங்களது படங்களை ரிலீஸ் செய்யாமல் தள்ளிப் போட ஆரம்பித்துள்ளனராம்.
மோகன்லாலின் ராக் அண்ட் ரோல் தீபாவளிக்கு வராமல் நவம்பர் 30ம் தேதிக்குத் தள்ளிப் போயுள்ளதாம்.
அதேபோல மம்முட்டியின் ரெளத்ரம், ஜனவரி 26ம் தேதிக்கு தள்ளிப் போய் விட்டதாம். முதலில் இப்படம் நவம்பர் 30ம் தேதிக்கு வருவதாக இருந்தது.
கேரளாவில் 30 தியேட்டர்களில் விஜய்யின் அழகிய தமிழ் மகன் ரிலீஸாகிறது. விஜய்யின் போக்கிரி கேரளாவில் 100 நாட்கள் ஓடியது நினைவிருக்கலாம். திருவனந்தபுரத்தில் மட்டும் இப்படம் 3 தியேட்டர்களில் நூறாவது நாளைக் கண்டது அங்கு விஜ்ய நிகழ்த்திய சாதனையாகும்.


Click it and Unblock the Notifications