விஜய் பர்த்டே கேக்.. த்ரிஷா வெளியிட்ட போட்டோ புதுசா? பழசா?.. டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: விஜய் பிறந்தநாளுக்கு எந்தவொரு பதிவையும் போட்டு விடாதேம்மா என்றும் புதுசா போட்டோக்களை இறக்கிடாதீங்க என ஏகப்பட்ட மீம்களை விஜய் ரசிகர்களே பதிவிட்டு வந்த நிலையில், பிழைத்துப் போகட்டும் என த்ரிஷா விட்ட ஒரு நாள் கேப்பில் த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் பிரேக்கப் என்றும் விஜய்யை அன்ஃபாலோ செய்து விட்டார் த்ரிஷா என நேஷ்னல் மீடியாக்களே கதறும் அளவுக்கு செய்திகள் பரவின.
இதுக்கு மேல சும்மா இருந்தால் சரியா இருக்காது என நினைத்த நடிகை த்ரிஷா நேற்று தனது இன்ஸ்டாகிராமில் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய அழகான போட்டோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களின் இதயங்களில் இடியை இறக்கி விட்டார்.

விஜய் - சங்கீதா இருவரும் மீண்டும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துறாங்க என்கிற அளவுக்கு கதை கட்ட ஆரம்பித்தவர்களின் நிலைமை தான் அந்தோ பரிதாபம் என்கிற ரேஞ்சுக்கு மாறிவிட்டது. இதற்கு இடையே முட்டுக் கொடுக்க நினைத்த சில ரசிகர்கள், இது விஜய் அண்ணா 2024ல் போட்ட சட்டை, புது போட்டோவே கிடையாது என கிளப்பி விட்டது தான் ஹைலைட்.
2024ல் எடுத்த போட்டோவா?: விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 கேக்குகளுடன் நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடியதை குறிப்பிடும் வகையில் நடிகை த்ரிஷா பிரெஷ் போட்டோ ஒன்றை ஷேர் செய்த நிலையில், இதே சட்டையை விஜய் அண்ணா 2024ல் போட்டிருந்தார் என்றும் த்ரிஷா பழைய போட்டோவை தான் இப்போ ஷேர் செய்துள்ளார் என சில ரசிகர்கள் முடிந்தவரை முட்டுக் கொடுக்க முயன்றனர்.
ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்: ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் தான் ஐபேன் 17 ப்ரோ மேக்ஸ் போன் லாஞ்ச் செய்யப்பட்டது. போட்டோ ஓரத்தில் அந்த ஆதாரத்தையும் அழகாக விட்டுச் சென்றுள்ளனர். அதை டீகோட் செய்யவில்லையா? என நெட்டிசன்கள் இது முழுக்க முழுக்க விஜய் பிறந்தநாள் அன்று எடுத்த போட்டோ தான் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
ரசிகர்கள் அப்செட்: தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ள விஜய் நடிகை த்ரிஷாவுடன் எப்படி பிறந்தநாள் கொண்டாடலாம் என்றும் சங்கீதா, ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷாவை எல்லாம் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லையே என விஜய் ரசிகர்களே பலர் திட்டித் தீர்த்து வருகின்றனர். ஆனால், ஒரு திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டால் இன்னொரு துணையை தேடிக் கொள்வதில் எந்தவொரு தவறும் கிடையாது என்றும் இது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறுகின்றனர்.
விஜய்யின் சட்டசபை பேச்சுக்கும் ஆக்ஷனுக்கும் ஃபயர் விட்ட ரசிகர்களே, த்ரிஷா வெளியிட்ட போட்டோவுக்குப் பின் அப்செட் ஆகியுள்ளனர் என்பதையும் மறுக்கவே முடியாது. இதில், அந்த போட்டோவை வைத்து சிலர் ஏஐ எடிட் என்கிற பெயரில் பண்ணும் கலாட்டாக்கள் வேறு நடப்பது தான் காலக்கொடுமை.


Click it and Unblock the Notifications