யாருக்கு ஓட்டுப்போட்டாலும் பாஜகவுக்குத்தான்.. கரூரில் என்ன நடந்தது.. மனம் திறந்து பேசிய விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து முதல் மாநாடு முதல் இன்று கடைசி பிரச்சாரம் வரை விஜய் தொடர்ந்து திமுக மற்றும் பாஜகவை எதிர்த்து தனது குரலை பதிவு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்று மாலையுடன் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் தனது இறுதி பிரச்சாரத்தை மேற்கொண்ட விஜய் கரூர் சம்பவத்தின் போது என்ன நடந்தது என்றும் யாருக்கு ஓட்டுப்போட்டாலும் அது பாஜகவுக்குத்தான் என காட்டமாக பேசியுள்ளார்.

Vijay blast against DMK and BJP in Today s Last Day Campaign

விஜய்க்கு ஓட்டுப் போட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் என திமுக தரப்பு சொல்லி வரும் நிலையில், திமுகவுக்கு ஓட்டுப்போடுவதே பாஜகவுக்கு ஓட்டுப் போடுவதற்கு சமம் என விஜய் பேசியுள்ளார்.

கரூர் சம்பவம் உலகமே பார்த்தது: கரூரில் என்ன நடந்தது என்பதை உலகமே நேரலையில் பார்த்தது. என் மேல எல்லா பழியையும் தூக்கிப் போடுறீங்க, அரசியல் பண்ண மாட்டோம் என சொல்லிக் கொண்டே சட்ட சபையில் விஜய் லேட்டா வந்ததாலத்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிர் பலி நேர்ந்தது என சொல்றீங்க என காட்டமாக திமுகவை அட்டாக் செய்து பேசினார்.

எல்லாரும் சேர்ந்து என்னை எதிர்க்கிறாங்க: திமுக அதிமுக போட்டி நடக்காமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து விஜய்யை எதிர்ப்பது ஏன் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் மக்களே. எல்லாரும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு எல்லாம் உங்கள் மீதுள்ள பயம் தான் காரணம். எங்கே நீங்க எல்லாம் விஜய்க்கு ஓட்டுப் போடுவீங்களோ என்று, ஆனால், நீங்க மாற்றத்தை விரும்புறீங்கன்னு அவங்களுக்கும் புரிந்தாலும் புரியாத மாதிரியே இருப்பாங்க என்றார்.

பாஜகவுக்குத்தான்: விஜய் அதிமுக, பாஜகவை எதிர்க்கவே இல்லை என தொடர்ந்து திமுக குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், இன்று நடந்த பிரச்சாரத்தின் போதும் விஜய் பாஜக மற்றும அதிமுகவை எதிர்த்து பேசினார். மேலும், திமுகவுக்கு ஓட்டுப் போட்டாலும் சரி மற்ற கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டாலும் சரி அவை எல்லாமே மறைமுகமாக பாஜகவுக்கு ஓட்டுப் போடுவதற்கு சமம். நான் கண்டிப்பாக விலை போக மாட்டேன். எப்போதும் பொய் சொல்ல மாட்டேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்க, உங்களுக்கான வளமான எதிர்காலத்தை நான் உருவாக்கிக் காட்டுறேன் என தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X