விஜய் மேடையில் அழுததெல்லாம் பக்கா நடிப்பா?.. இதுதான் ஸ்க்ரிப்ட் பேப்பரா?.. ஆத்தாடி ஃபோட்டோவை பாருங்க
வேலூர்: நடிகர் விஜய் இன்று தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை வேலூரில் நடத்தினார். வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை பந்தல் எல்லாம் போட்டு அக்கட்சியினர் கலக்கியிருந்தார்கள். கூட்டத்தில் பல விஷயங்களை பேசிய விஜய்; தனது பேச்சின் இடையே அழவும் செய்தார். அதை பார்த்து அக்கட்சியினரும் எமோஷனல் ஆனார்கள். சூழல் இப்படி இருக்க அவர் அழுதது பக்கா நடிப்பு என்றும்; ஸ்க்ரிப்ட் பேப்பரில் எழுதி கொடுத்தபடி செய்திருக்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி அந்த பேப்பர் இதுதான் எனவும் ஒரு புகைப்படம் பரவிவருகிறது.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துவருகிறார். அந்தவகையில் இன்று வேலூரில் கூட்டம் நடத்தினார். கரூர், சேலம் கூட்டங்களில் நடந்த அசம்பாவிதம் போல் இங்கேயும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பந்தல், நாற்காலிகள் எல்லாம் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு போடப்பட்டது. இந்த முறை எந்த விரும்பத்தகாத நிகழ்வும் நடக்காமல் கூட்டம் நடந்து முடிந்திருப்பது அக்கட்சியினருக்கு நிச்சயம் நிம்மதியை கொடுத்திருக்கும்.
விஜய் பேச்சு: கூட்டத்தில் பேசிய விஜய், 'தமிழ்நாடு என்றால் விஜய். விஜய் என்றால் தமிழ்நாடு. நடக்கவிருப்பது தேர்தல் இல்லை. போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் என்.டி.ஏ, டெல்லி பற்றியெல்லாம் ஏன் பேசுகிறார்கள் என புரியவில்லை. இந்த ஆட்சியில்தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக மாறிவிட்டதாக முதலமைச்சர் சொல்கிறார். இந்த உல்டா மாடல் ஆட்சியில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இல்லை. அண்ணா, எம்ஜிஆர், காமராஜர் காலத்தில் சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது. இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன் நடத்தும் மாநிலமாக மாறியிருக்கிறது.

சென்சிட்டிவ்வான சென்ட்டிமென்ட்: இந்த விஜய்யும், மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி. உடலும் உயிரும் மாதிரி. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. ஆம், சென்சிட்டிவ்வான சென்ட்டிமென்ட்" என பேசினார். அப்போது கண்கள் கலங்கி மேடையில் அங்கும், இங்கும் நடந்துவிட்டு வந்து மீண்டும் பேச்சை தொடங்கினார். இதை பார்த்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் எமோஷன் ஆனார்கள். இந்நிலையில் மேடையில் விஜய் அழுதது பக்கா நடிப்பு என சோஷியல் மீடியாவில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதுமட்டுமின்றி இதுதான் ஸ்க்ரிப்ட் பேப்பர் என்று ஒரு புகைப்படத்தையும் பலரும் ஷேர் செய்துவருகிறார்கள்.
அந்த பேப்பரில், 'சென்சிட்டிவ்வான சென்ட்டிமென்ட்' என்பதை எவ்வளவு கத்தி சொல்ல முடியுமோ அவ்வளவு கத்த வேண்டும். இந்த வரியை பேசி முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட வேண்டும். பேச முடியாதது போல் செய்து, மைக்கை விட்டு சற்று நகர்ந்து சென்று உங்கள் பாணியில் அழவும்.

மறுபடியும் மைக் அருகே வந்து கண்கள் கலங்கி சாரி சொல்லிவிட்டு எமோஷனலாக பேச தொடங்கவும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படம் தற்போது காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அப்போ அழுதது எல்லாம் உண்மை இல்லையா? இதை பார்த்து சில்லறைகளை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்தான் பாவம் எனவும் பலர் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேசமயம் இது உண்மையான புகைப்படம் இல்லை ஏஐ ஃபோட்டோ என தவெகவினர் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











