அஜித் செய்த விளம்பரம்.. விஜய்க்கே கேம்ப்பா கொடுத்துட்டாங்களே.. என்னென்னமோ நடக்குது போங்க
நெல்லை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து தனித்து களமிறங்கும் விஜய்; நேற்று நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டார். அதில் வழக்கம்போல் டெம்ப்ளேட்டாக பேசிவிட்டு சென்றார். மேலும் சங்கீதா விவகாரம் குறித்தும் மறைமுகமாக குறிப்பிட்டார். 20ஆம் தேதி அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறார். 234 தொகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை அறிவித்தாலும்; எடப்பாடி தொகுதி வேட்பாளர் மட்டும் திடீரென மாயமாகிவிட்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதி அது. எனவே தான் வெல்ல வேண்டும் என்பதற்காக பழனிசாமி தனது அதிகார கரங்களை பயன்படுத்தி தவெக வேட்பாளரை மாயமாக்கிவிட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் அதிகம் எழ தொடங்கியிருக்கின்றன.

விஜய்யின் பரப்புரை: ஒரு வேட்பாளர் மிஸ் ஆகிவிட்டதால் மொத்தம் 233 தொகுதிகளில் போட்டியிடும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது தவெக. ஒரு வேட்பாளரையே தொலைத்துவிட்டு எதற்காக விஜய் கட்சி நடத்துகிறார் என்றும் கிண்டல்கள் முளைக்க தொடங்கிவிட்டன. ஆனால் விஜய்யோ அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. பெரம்பூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை தொடங்கிய அவர் தொடர்ந்து கொளத்தூர், திருச்சி கிழக்கு உள்ளிட்ட தொகுதிகளிலும் பரப்புரை கூட்டத்தில் பேசினார்.
டெம்ப்ளேட்டான வசனங்கள்தான்: ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய்யின் பேச்சு மாறுபடும் என்றுதான் அனைவருமே நினைத்தார்கள். ஆனால் அவரோ, 'உங்களுக்காக வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். தயவு செய்து எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதை கேட்ட பலரும், 'இவர் என்ன இப்போது கஷ்டப்படுகிறார். வருவதெல்லாம் தனி விமானத்தில்தான். இவர் எங்கிருந்து சொகுசான வாழ்க்கையை தூக்கி எறிந்தார்' என வாள் சுழற்றுகிறார்கள்.
தூத்துக்குடியில் கூடிய கூட்டம்: சூழல் இப்படி இருக்க நேற்று திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது வழக்கமான விஷயங்களை பேசிய அவர்; சங்கீதா விவகாரம் குறித்தும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். முன்னதாக, அவர் விமான நிலையத்திலிருந்து நெல்லை நோக்கி அவர் சென்றபோது அவரது வாகனங்களை ரசிகர்கள் பின்தொடர்ந்து சென்றதில் ஐந்து விபத்துகள் நடந்தன. அதேபோல் அவரை பார்ப்பதற்கு நேற்று அலைகடலென மக்கள் கூட்டம் கூடியது. அதை பார்த்து மற்ற கட்சியினர் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
கேம்ப்பாவை தூக்கி போட்ட ரசிகர்கள்: அதேபோல் நேற்று வெயில் கொளுத்தியதன் காரணமாக; பிரசார வேனில் அவர் நின்றுகொண்டிருந்தபோது கிட்டார், குளிர் பானங்களை எல்லாம் தொண்டர்களும், ரசிகர்களும் தூக்கி போட்டார்கள். அதை தளபதி லாவகமாக பிடித்துக்கொண்டார். அதேபோல் சிறுவன் ஒருவனையும் தனது தோளில் தூக்கி வைத்திருந்தார். இந்நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விஜய் பிரசார வேனில் வந்துகொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர், கேம்ப்பா குளிர் பானத்தை தூக்கி வீசினார். அதையும் சரியாக கேட்ச் பிடித்தார். இந்த கேம்பா குளிர்பான விளம்பரத்தில் சமீபத்தில்தான் அஜித் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















