விஜய்யை பார்த்ததும் விசித்திரம்.. காரில் நீச்சல் அடித்து முத்தம்.. தவெகவினரை கன்ட்ரோலே செய்ய முடியாதா?

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார் விஜய். அவரது கட்சி நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. இவர் திருச்சி கிழக்கிலும், பெரம்பூரிலும் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். எப்படியாவது ஒரு தொகுதியிலேனும் வென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் அவர். அவருடன் பயணிப்பவர்களும் அதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்கள். தேர்தலையொட்டி அவர் பரப்புரையையும் தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் புதுச்சேரிக்கு பரப்புரை சென்றபோது தவெகவினர் செய்த விசித்திர செயல் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.

தவெக கட்சி தலைவர் விஜய் தேர்தல் வேலைகளில் பரபரப்பாகியிருக்கிறார். அவர் திருச்சி கிழக்கு தொகுதியிலும், பெரம்பூரிலும் போட்டியிடுகிறார். அதற்காக சில நாட்களுக்கு முன்புதான் வேட்புமனு தாக்கலையும் செய்து முடித்தார். இரண்டு வேட்புமனுக்களில் தன் மீது செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் குறித்து மாற்றி மாற்றி குறிப்பிட்டிருப்பதாகவும்; இதன் காரணமாக அவருக்கு சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Campaign Viral Fans Climb Moving Car Video Sparks Reactions
Photo Credit:

குடும்பத்துக்கே கடனா?.. என்னங்க போங்க: அதேபோல் தனது மகன், மகள், மனைவி, அப்பா, அம்மா ஆகியோருக்கு கடன் கொடுத்திருப்பதாக அவர் தன்னுடைய வேட்புமனுவில் குறிப்பிட்டிருந்த விஷயம் ட்ரோலை சந்தித்தது. குடும்பத்தினருக்கு கொடுக்கும் காசை கடனாகவா கொடுப்பார்; இவரெல்லாம் என்ன மாதிரியான குடும்ப தலைவனோ என்று விமர்சனத்தையும் பலர் முன்வைத்துவருகிறார்கள். இப்படி அவரை சுற்றி எழுந்திருக்கும் சங்கீதா பிரச்னை பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. போதாக்குறைக்கு திரிஷாவோடு வேறு ஒரு திருமணத்துக்கு ஒரே நிறத்திலான உடையை அணிந்துகொண்டு ஜோடியாக வந்திறங்கினார். அதுவும் அவரது இமேஜை கொஞ்சம் டேமேஜ் ஆக்கியிருக்கிறது.

தேர்தல் நிலவரம் எப்படி?: தேர்தலை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் அவரது கட்சி வெற்றியை பெறுவது கொஞ்சம் கடினமானதாகவே தெரிகிறது. ஏனெனில் அவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து; விவாகரத்து வேண்டுமென்று மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். ஏப்ரல் 20ஆம் தேதி அந்த மனுவானது விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற பயத்தில் கட்சியினர் இருக்கிறார்கள்.

Also Read
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா?.. நேஷனல் க்ரஷ் சொன்ன குட் நியூஸ்.. சினிமாவிலிருந்து ஓய்வா?
ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா?.. நேஷனல் க்ரஷ் சொன்ன குட் நியூஸ்.. சினிமாவிலிருந்து ஓய்வா?

விஜய்யின் தைரியம்?: அதேசமயம் விஜய் ரொம்பவே கான்ஃபிடன்ஸாக இருக்கிறார். அவர் பரப்புரைக்கெல்லாம் உற்சாகமாக புறப்படுகிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கல். இது ஒருபக்கம் இருக்க தமிழநாட்டில் அவர் எங்கே பரப்புரைக்கு சென்றாலும், 'உங்களுக்காக வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன். உங்களை நம்பித்தான் வந்திருக்கிறேன். தயவு செய்து உங்கள் பிள்ளை, தம்பியாகிய எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்' என டெம்ப்ளேட்டாக பேசிவருவது கிண்டலையும் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் பரப்புரை: இன்று விஜய் புதுச்சேரியில் பரப்புரையை மேற்கொள்கிறார். அதற்காக தனது காரில் சென்றார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சென்றபோது அவரது காரை பார்த்த தவெக தொண்டர்கள் உடனடியாக காரின் முன்பக்கத்தில் ஏறிக்கொண்டு கண்ணாடியில் முத்தத்தை கொடுத்தார்கள். பார்ப்பதற்கு ஓடும் காரில் நீச்சல் அடிப்பது மாதிரி இருந்தது. அதனைப் பார்த்த மற்றவர்களோ, இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். இதெல்லாம்தான் விபத்துக்கு காரணம். இவர்களை கன்ட்ரோலே செய்ய முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X