»   »  விஜய்யின் வித்தியாச தீபாவளி

விஜய்யின் வித்தியாச தீபாவளி

Subscribe to Oneindia Tamil
Click here for more images
வழக்கம் போல இந்த தீபாவளியையும் விஜய் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே தீபாவளிப் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார் விஜய் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள், ஆடைகள் வழங்கியும் கொண்டாடினார்.

இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை 200 ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடினார் விஜய்.

இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், விஜய்யுடன் ஆட்டோ டிரைவர்கள் சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடினர். விஜய்க்கு தீபாவளி வாழ்த்துக்களைக் கூறியதுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இன்னொரு நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதனின் மனைவியும் சென்னை இன்னர் வீல் ஒருங்கிணைப்பாளருமான நல்லம்மை ராமநாதன், 500க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளுக்கு பட்டாசுகள், இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மோனோ ஆக்டிங் காமெடி செய்து குழந்தைகளை குஷிப்படுத்தினார்.

Read more about: vijay
Please Wait while comments are loading...