கோகோ கோலா விளம்பரத்தில் நான் மட்டுமா நடிச்சேங்கண்ணா: விஜய்
சென்னை: கொக்க கோலா விளம்பரத்தில் நடிகர் ஆமீர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் தான் நடித்துள்ளனர் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் கத்தி படத்தில் குளிர்பான நிறுனத்தை எதிர்த்து போராடும் கதாபாத்திரத்தில் நடித்தாலும் நடித்தார். மக்கள் அவரை சமூக வலைதளங்களில் ஓட்டி எடுத்துவிட்டனர். விஜய் நிஜ வாழ்க்கையில் கொக்க கோலா விளம்பரத்தில் நடிப்பாராம். ஆனால் படத்தில் மட்டும் நல்ல பிள்ளை போன்று குளிர்பான நிறுவனத்தை எதிர்ப்பாராம். என்னா ஒரு நடிப்புடா சாமி என விஜய்யை ஆளாளுக்கு விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் தான் விஜய் இது குறித்து ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
ஆமாம், நான் கோக் விளம்பரத்தில் முன்பு நடித்தேன். ஏன் சச்சின், ஆமிர் கான் போன்ற இந்தியாவின் பெரிய பிரபலங்களும் தான் பிராண்ட் அம்பாசிடர்களாக இருந்துள்ளனர். நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்தவில்லை. என்னோட தவறுகளை திருத்திக்கொள்கிற சாதாரண மனுஷன் தான் நானும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த பதிலை பார்த்தாவது மக்கள் அவரை நக்கலடிப்பதை நிறுத்துவார்கள் என்று நம்புவோம்.


Click it and Unblock the Notifications











