அஜித்தை மகன் சஞ்சய் பாராட்டிய விவகாரம்.. விஜய் தரப்பில் விளக்கம்

தனது மகன் பெயரில் போலி சமூகவலைதளப் பக்கங்கள் இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

விஜய் சர்கார் ரிலீஸ் தேதி நெருங்கவும், வந்து குவியும் தடைகள் பட்டியல்- வீடியோ

சென்னை: தனது மகன் மற்றும் மகளுக்கு எந்தவித சமூகவலைதளங்களிலும் கணக்குகள் இல்லை என விஜய் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தற்போது கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார். குறும்படம் ஒன்றில் நடித்துள்ள அவர் விரைவில் தமிழ் சினிமாவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay clarifies on Sanjays instagram issue

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்ததாக சில செய்திகள் இணையத்தில் பரவியது.

அதில் ஒரு கேள்வியில், 'தனக்கு மிகவும் பிடித்த நடிகர் தன் அப்பாவிற்கு அடுத்தபடியாக அஜித்' என சஞ்சய் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. மேலும், அஜித் செய்யும் பிரியாணி தனக்குப் பிடிக்கும் என்றும், தல கெத்து தான் என சஞ்சய் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியானது. இது தொடர்பான ஸ்கீர்ன்ஷாட் இணையத்தில் வைரலானது. இதனை அஜித் ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பெருமையுடன் ஷேர் செய்தனர்.

ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக சஞ்சய் கூறியதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'தனது மகன் ஜாசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா இருவரும் எந்த வித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும், ரசிகர்கள் இதுபோன்று போலியான கணக்குகளை நம்ப வேண்டாம்' என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X