விஜய்க்காக விசில் அடித்த அடுத்த நாளே அப்பா மறைவு.. கதறி அழுத ஜீவா.. கட்டிப்பிடித்து தேற்றிய தளபதி
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று நாளை முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார் விஜய். நாளை காலை 11.30 மணிக்கு பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யை வைத்து பல ஹிட் படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரி நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் தற்போது சென்னையில் வைக்கப்பட்டிருக்கிறது. உடலுக்கு அஞ்சலி செலுத்த விஜய் நேரில் வருவாரா மாட்டாரா என்ற கேள்வி அனைவரிடமுமே இருந்தது.
விஜய் நடிகராக இருந்து தமிழ்நாடு முதலமைச்சராக நாளை பதவியேற்கவிருக்கிறார். அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கு அவருக்கு இருந்த நடிகர் என்ற அதீதமான வெளிச்சம்தான் காரணம். அந்த வெளிச்சத்தை முதன்முதலில் விஜய்க்கு கொடுத்தவர் ஆர்.பி.சௌத்ரி. அவர்தான் விஜய்யின் கரியரில் முதல் ஹிட் படமான பூவே உனக்காக திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெற்றிதான் திரைத்துறையில் விஜய்க்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்,

100வது படமும் விஜய்யுடன் செய்ய ஆசை: பூவே உனக்காக படத்தை தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்தார். அந்த இரண்டு படங்களுமே விஜய்யின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தொடர்ந்து ஜில்லா படம் மட்டும்தான் தோல்வியாக அமைந்தது. இது ஒருபக்கம் இருக்க சூப்பர் குட் ஃபிலிம்ஸின் நூறாவது படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டார் சௌத்ரி. அதில் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் தொடங்கியது; கண்டிப்பாக விஜய் நடிப்பார் என்று ஜீவாவும் உறுதி செய்திருந்தார்.
படம் நடக்கவில்லை: ஆனால் விஜய் அதிலிருந்து வெளியேறினார். ஏனெனில் அந்த சமயத்தில் தவெக கட்சியை தொடங்கி முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருந்தார். இந்த நேரத்தில் நடித்தால் ஒத்துவராது என்பதற்காகத்தான் ஜனநாயகன் திரைப்படத்தோடு ஒதுங்கவும் முடிவு செய்திருந்தார். அதன் காரணமாகவே சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்திலிருந்து வெளியேறவில்லை என்று தெரிகிறது. சௌத்ரியின் கடைசி ஆசை தனது 100வது படத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆனால் அது நடக்கவில்லை.
விசில் அடித்த ஜீவா: இப்படி சௌத்ரியின் குடும்பத்துக்கும், விஜய்க்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. நண்பன் படத்தில்கூட ஜீவாவும், விஜய்யும் சேர்ந்து நடித்திருந்தார்கள். நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வந்து தவெக முன்னிலை வகிக்க தொடங்கியவுடனேயே; நடிகர் ஜீவா தனது வீட்டு மாடியில் இருந்து விசில் அடித்து எமோஷனலாக விஜய்யின் வெற்றியை கொண்டாடினார். ஆனால் அந்த விசில் அடித்த சம்பவத்துக்கு அடுத்த நாளே; அதாவது நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் சௌத்ரி உயிரிழந்தார்.
தேற்றிய விஜய்: அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. தனக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவருக்கு விஜய் நேரில் வந்து அஞ்சலில் செலுத்துவாரா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால் விஜய்யோ எதையும் மறக்காமல் ரொம்பவே சோகத்துடன் வந்து தனது இறுதி மரியாதையை அளித்தார். அப்போது ஜீவா சோகத்தில் அழ ஆரம்பிக்க; உடனே அவரை கட்டியணைத்து தேற்றினார். அந்த சமயத்தில் விஜய்யின் கண்களும் கலங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
