விசில் மாலை போட்டதும் கண் கலங்கிய தளபதி விஜய்.. சினிமாவை விட ரியாலிட்டியில் கிடைக்கும் ரியல் அன்பு!
சென்னை: இதுவரை நடிகராக இருந்த விஜய்க்கு மக்கள் தங்கள் அன்பை தியேட்டருக்குச் சென்று டிக்கெட்டுகள் வாங்கிப் பார்த்து சில லட்சங்களில் ஆரம்பித்த சம்பளம் 200 கோடியை தாண்டும் அளவுக்கு விஜய்யை கொண்டாடிய நிலையில் தான் அவரது மார்க்கெட்டும் உயர்ந்தது.
விஜய் படங்களின் ஷூட்டிங் நடந்தாலே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து பார்க்கின்றனர் என்பதாலே பெரும்பாலும் செட்டுக்குள் படங்களை எடுக்கவும் மற்ற மாநிலங்களில் எடுக்கவும் முடிவு செய்தார். கோட் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்ற நிலையில், அங்கேயும் அவரது ரசிகர்கள் பெருந்திரளாக விமான நிலையத்தில் இருந்து வரவேற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் எந்தளவுக்கு விஜய் மீது அன்பு வைத்துள்ளனர் என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டங்களின் போது விஜய் கண்குளிர கண்டு வருவதோடு சில நேரங்களில் கண்ணீர் வழியவும் கண்டு வருகிறார்.
தர்பூசணி முதல் கேம்பா வரை: விஜய் வெயிலில் மக்களை சந்திக்க வருகிறார் என்பதற்காக அவருக்காக தர்பூசணியை தூக்கி வாகனத்தில் போடுவதும், கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தூக்கிப் போட அவர் லாவகமாக கேட்ச் பிடித்து நன்றி சொல்ல அதன் வீடியோக்களையும் இளைஞர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். அஜித் விளம்பரப்படுத்திய கேம்பா கூல்டிரிங்க்ஸையும் இளைஞர்கள் தூக்கிப் போடும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது.
விசில் மாலை: திருநெல்வேலி, தூத்துக்குடியில் நேற்று எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பெருங்கூட்டம் விஜய்யை சந்தித்த காட்சிகளை பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருப்பதை உணர முடிகிறது. கிட்டார் பரிசளிப்பது, டெடி பியர் பொம்மைகளை குழந்தைகள் பரிசளிப்பது, விசில் கொண்டு உருவாக்கப்பட்ட மாலையை அணிவிப்பது என மக்கள் தங்கள் பாசத்தை பொழிந்து தள்ளிவிட்டனர்.
கண்கலங்கிய விஜய்: விசில் மாலையை கழுத்தில் அணிந்ததும் மக்கள் மற்றும் தனது கட்சித் தொண்டர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை அறிந்துக் கொண்ட விஜய் கண்கலங்கிய காட்சிகளும் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு பிறகும் மக்கள் தன்னை நம்பி வருகிறார்களே, இப்படி அன்பு செலுத்துகிறார்களே அவர்களுக்காகத்தான் இனிமேல் வாழணும் என்கிற எண்ணமே அவருக்கு வந்துவிட்டது என்கின்றனர். தனது ரசிகர்கள் யாரையும் ஏமாற்றாமல், அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்ததும் அரசியலுக்கு வந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலில் தனது கட்சி சார்பாக தேர்தலை சந்திக்கும் தில்லுக்கே விஜய் கில்லி தான் என்று சொல்லலாம் என அரசியல் விமர்சகர்களே பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











