அந்த நடிகையை தொடர்ந்து.. இந்த நடிகர் செய்த சாதனை.. கொண்டாடும் ரசிகாஸ்!

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

2011ஆம் ஆண்டு வெளியான நுவ்வில்லா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா.

தொடர்ந்து லைஃப் இஸ் பியூட்டிஃபுல், எவடே சுப்பிரமணியம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பெல்லி சூப்புலு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா.

தமிழில் ஆதித்ய வர்மா

தமிழில் ஆதித்ய வர்மா

பின்னர் துவாரகா, அர்ஜூன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் அர்ஜூன் ரெட்டி படம் பெரும் ஹிட்டானது. இந்த படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழிலும் அந்தப் படம் பெரும் ஹிட்டானது.

நோட்டா படம் மூலம் அறிமுகம்

நோட்டா படம் மூலம் அறிமுகம்

மகாநடி, கீதா கோவிந்தம் ஆகிய ஹிட் படங்களையும் கொடுத்தார். நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. தற்போது லிஜர் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

13 மில்லியன் ஃபாலோயர்ஸ்

13 மில்லியன் ஃபாலோயர்ஸ்

விஜய் தேவர கொண்டா அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

ரசிகர்களுடன் உறவு பாலம்

ரசிகர்களுடன் உறவு பாலம்

நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி ரசிகர்களுடன் ஒரு உறவு பாலத்தை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் பலரும் தங்களின் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு குஷிப்படுத்தி வருகின்றனர்.

ரசிகர்களுடன் உரையாடல்

ரசிகர்களுடன் உரையாடல்

நடிகைகள் குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, படிப்பது, தூங்குவது, மேக்கப் போடுவது, விளையாடுவது என அனைத்து போட்டோக்களையும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றனர். சில நேரங்களில் ரசிகர்களுடன் உரையாடியும் வருகின்றனர்.

குவியும் ரசிகர்கள்

குவியும் ரசிகர்கள்

இதேபோல் நடிகர்களும் தாங்கள் உடற்பயிற்சி செய்வது, தாங்கள் வித்தியாசமாக செய்யும் பணிகள் போன்றவை குறித்தும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் போட்டோக்கள் வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் சினிமா நட்சத்திரங்களை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறைந்த நாட்களில் சாதனை

குறைந்த நாட்களில் சாதனை

அதேநேரத்தில் சர்ச்சையில் சிக்கும் பிரபலங்களை கன்னாபின்னாவென விமர்சித்தும் வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய குறைந்த நாட்களிலேயே 13 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து

தென்னிந்திய நடிகர்களில் மிகக் குறைந்த நாட்களில் 13 மில்லியன் பாலோயர்களை பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையை விஜய்தேவரகொண்டா பெற்று இருக்கிறார். அண்மையில் நடிகை பூஜா ஹெக்டே 15 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்தார். அதனை வீடியோ வெளியிட்டு கொண்டாடினார் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X