இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா தான் டாப்பு.. 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்!
ஹைதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு நடிகர்களுள் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலன் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் விஜய் தேவரகொண்டா.
தற்போது இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களுள் அதிக ஃபாலோவர்ஸ்களை கொண்ட நடிகர் என்ற பெருமையை விஜய் தேவரகொண்டா பெற்றுள்ளார்.

தமிழிலும் ரசிகர்கள்
அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு கீதா கோவிந்தம், டாக்சிவாளா போன்ற வெற்றி படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து நோட்டா, டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடிக்க அந்த படங்கள் தமிழிலும் வெளியாகின. அதன் மூலம் தமிழ் ரசிகர்களையும் குறிப்பாக பெண் ரசிகர்களை கவர்ந்தார் விஜய் தேவர் கொண்டா.

தயாரிப்பாளராகவும் உதவி
தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருப்பது மட்டுமன்றி வருடந்தோறும் 500 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார் விஜய் தேவரகொண்டா. அது மட்டுமன்றி தன்னுடைய King Of The Hill ப்ரோடுக்ஷன்ஸ் மூலம் திறமையான புது முக நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
விஜய் தேவர் கொண்டா நடிப்பில் ஃபைடர் திரைப்படம் அடுத்த ஆண்டில் வெளிவர உள்ளது. இந்த படத்தை புரி ஜகநாத் இயக்க அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். ஃபைடர் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

டாப்பில் விஜய் தேவரகொண்டா
விஜய் தேவர் கொண்டா இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கடந்துள்ளார். தென்னிந்திய நடிகர்களுள் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கடந்த முதல் நடிகர் விஜய் தேவரகொண்டா ஒருவரே ஆவார். அவருக்கு அடுத்த படியாக அல்லு அர்ஜுன் 9.8 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கடந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











