twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: நோட்டாவில் நடித்ததால் எனக்கு எந்த பயமும் இல்லை: விஜய் தேவர கொண்டா

    நோட்டா திரைப்படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா ஒன்இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

    |

    Recommended Video

    Vijay Devarakonda Exclusive Interview

    சென்னை: நோட்டா திரைப்படத்தில் நடித்ததற்காக தான் பயப்படவில்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

    இவர் நடித்துள்ள நேரடி தமிழ் படம் நோட்டா. அரசியல் திரில்லர் படமான நோட்டா நேற்று ரிலீசானது. படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்த விஜய் தேவரகொண்டாவை ஒன்இந்தியாவிற்காக சந்தித்தேன்.

    அவர் அளித்த பேட்டியில் இருந்து...

    தமிழ்நாடு அரசியல் தெரியாது

    தமிழ்நாடு அரசியல் தெரியாது

    எனக்கு தமிழ்நாடு அரசியல் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால் நோட்டா ஸ்கிரிப்டை கேட்டவுடன் நிச்சயம் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று தோன்றியது. அதன்பிறகு தான் தமிழ்நாட்டில் நடந்த அரசியல் சம்பவங்கள் பற்றி படித்து தெரிந்துகொண்டேன்.

    எனக்கு பயமில்லை

    எனக்கு பயமில்லை

    நோட்டா போன்ற படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கும். நான் எந்த தவறும் செய்யாத போது, யாரையும் குறித்து தாக்காத போது, இதுபோன்ற படங்களில் நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. இதனால் எனக்கு எந்த பயமும் இல்லை.

    ரொமான்ஸ் தேவையில்லை

    ரொமான்ஸ் தேவையில்லை

    நோட்டா படத்துக்கு ரொமான்ஸ் தேவைப்படவில்லை. இது ஒரு அரசியல் படம். அதனால் தான் தேவையில்லாத ரொமான்ஸ் காட்சிகளை வைக்கவில்லை.

    மீண்டும் தமிழ்ப்படம்

    மீண்டும் தமிழ்ப்படம்

    தமிழில் அடுத்து ஒரு படம் பண்ண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது தமிழ், தெலுங்கு என இரு மொழி படம். தெலுங்கில் டியர் காம்ரேட் மற்றும் இன்னொரு படம் நடிக்கிறேன்", என அவர் கூறினார்.

    English summary
    While speaking to Oneindia actor Vijay Devarakonda shared his experince of working in Nota.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X