ஆளை விடுங்கப்பா சாமி.. ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டாவிற்கு விரைவில் நிச்சயதார்த்தம்!
சென்னை: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி நிச்சயம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ராஷ்மிகா தற்போது புஷ்பா 2, Rainbow, The Girlfriend, Chaava என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
காதலர்களுக்கும், டீன் ஏஜ் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருப்பது கீதா கோவிந்தம். இப்படத்தில் முறைப்பது, சிரிப்பது, அழுவது என க்யூட்டாக எக்ஸ்பிரஷன்களை கொடுத்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் ராஷ்மிகா மந்தனா. அந்த படத்தில் விஜய்தேவர கொண்டாவுடன் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சி என அனைத்தும் பக்காவாக இருக்கும். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற முத்தக்காட்சி மட்டும்,பல ரசிகர்களால் ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டது. அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்ததால், மீடியாக்களின் கண்களில் சிக்கினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என்று கூறினாலும், இணையவாசிகள் இவர்களை விடாது துரத்தி வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா காதல்: கடந்த ஆண்டு விஜய்தேவரகொண்ட மாலத்தீவு சென்றிருந்தார். இருவரும் மாலத்தீவு செல்ல தனித்தனி காரில் விமான நிலையம் வந்தாலும், ஒரே விமானத்தில் தான் மாலத்தீவு சென்றனர். அது மட்டுமில்லாமல், விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிகா போட்டுக்கொண்டு போட்டோ எடுத்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டு வரும் போட்டோவையும் ஷேர் செய்து இருவரின் காதலை அம்பலப்படுத்தினர். அது மட்டுமில்லாமல், தீபாவளி பண்டிகையை நடிகை ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் கொண்டாடினார் எனவும், இருவரும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள் எனவும் இருவரும் குறித்தும் பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

விரைவில் டும்டும்: அந்த வகையில், தற்போது இருவர் குறித்தும் ஒரு புது தகவல் வெளியாகி உள்ளது. இது என்னவென்றால் விரைவில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற போகிறதாம். அதுவும் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெறப் போகிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











