7 மில்லியன்.. தென்னிந்தியாவிலேயே இவர் தான் டாப்.. ரசிகர்களின் அன்பில் நனையும் விஜய் தேவரகொண்டா!
ஹைதராபாத்: தென்னிந்திய நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் ரசிகர்களை அள்ளிய ஹீரோவாக மாறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.
Recommended Video
2011ம் ஆண்டு வெளியான நூவில்லா படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா.
ஆனாலும், 2015ம் ஆண்டு வெளியான நானியின் எவடே சுப்பிரமணியம் படத்தில் மூலம் தான் டோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்டார்.

அர்ஜுன் ரெட்டி
பெலி சூப்புலு, துவாரகா என தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டாவை டோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான். கம்மி பட்ஜெட்டில் உருவான அந்த படம் இந்தியளவில் பேசப்பட்டு 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனையும் அள்ளியது.

தமிழில்
அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த அர்ஜுன் ரெட்டிக்கு, தமிழிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. நோட்டா, டியர் காம்ரேடு, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் விஜய் தேவரகொண்டா படங்கள் இரு மொழிகளிலும் வெளியாகின.

பாலிவுட் படம்
தென்னிந்தியாவில் இளம் ஹாட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக பூரி ஜெகநாத் இயக்கும் ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகள்
கொரோனா நிவாரண நிதியாக சமீபத்தில் 1 கோடிக்கும் அதிகமான நிவாரண தொகையை அளிக்க முன் வந்த விஜய் தேவரகொண்டாவை, சில ஆன்லைன் போர்ட்டல்கள் வேண்டுமென்றே தவறான செய்திகள் பரப்பியதால், தன்னை காலி செய்ய பார்க்கின்றனர். இது போன்ற ஃபேக் நியூஸ்கள் பலரது வாழ்க்கையை கெடுத்து விடும் என வீடியோ மூலம் விளாசி தள்ளினார் விஜய் தேவரகொண்டா.

டோலிவுட் நடிகர்கள் ஆதரவு
விஜய் தேவரகொண்டாவின் வீடியோவை பார்த்த டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, முதல் ஆளாய் விஜய் தேவரகொண்டாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதனை தொடர்ந்து, ராணா டகுபதி, காஜல் அகர்வால், சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் தேவரகொண்டாவின் கருத்தை ஆமோதித்துள்ளனர்.

70 லட்சம் ரசிகர்கள்
டோலிவுட் ரசிகர்களால் ரவுடி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் புகழை ஒரு போதும் யாராலும் அழிக்க முடியாது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 7 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர். தென்னிந்தியாவிலேயே 70 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட முதல் ஹீரோ விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னிலையில்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பல முன்னணி டோலிவுட் நடிகர்களை இந்த ரவுடி பேபி பின்னுக்குத் தள்ளி இருக்கிறது. 6.7 மில்லியன் ரசிகர்களுடன் அல்லு அர்ஜுனும், 4.6 மில்லியன் ரசிகர்களுடன் மகேஷ் பாபுவும், 4.5 மில்லியன் ரசிகர்களுடன் பிரபாஸும் உள்ளனர். நடிகைகளில் பார்த்தால், காஜல் அகர்வால் 14 மில்லியனையும், பூஜா ஹெக்டே 10 மில்லியனையும் கடந்து சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











