ராஷ்மிகா மந்தனா மீது வெறித்தனமான காதல்.. விஜய் தேவரகொண்டா சொன்னத பாருங்க.. கண்ணீரும் விட்டாராம்

சென்னை: விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் என்றும் இரண்டு பேருக்கும் சமீபத்தில்தான் ரகசிய நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ராஷ்மிகா நடித்த தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசியது அவர்களுக்கிடையே இருக்கும் காதலை உறுதி செய்திருப்பதாகவே கருதப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்தார்கள். இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதை அடுத்து ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வர ஆரம்பித்தார்கள். நாளடைவில் அவர்களுக்குள் இருந்த பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. ஆனால் இதுவரை அதனை அவர்கள் உறுதி செய்யவில்லை. அதேசமயம் மறைமுகமாக உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ரகசிய நிச்சயதார்த்தம்?: திரைத்துறையிலிருந்து ஒருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று ராஷ்மிகாவும் தெரிவித்திருந்தார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது என்று சமீபத்தில் தகவல்கள் பரவின. மேலும் விரைவில் திருமண தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்கள் நிச்சயதார்த்தத்தை பற்றி வாய் திறக்கவில்லை என்றாலும் அது உண்மைதான் என்று திரைத்துறையினர் அடித்து சொல்கிறார்கள். இந்நிலையில் ராஷ்மிகா நடித்த தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தின் வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார்.

Vijay Deverakonda Emotional Speech for Rashmika at The Girlfriend Event Fuels Secret Engagement Buzz
Photo Credit:

விஜய் தேவரகொண்டா பேச்சு: அந்த விழாவில் பேசிய அவர், "ராஷ்மிகா மந்தனாவை நான் கீதா கோவிந்தம் படத்திலிருந்து பார்த்துவருகிறேன். அவர் தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தில் ஏற்றிருந்த பூமாதேவி கேரக்டர்தான் நிஜ வாழ்க்கையிலும். தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போது இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்ததை நினைத்து ரொம்பவே நான் பெருமைப்படுகிறேன். விமர்சனங்களையும், கேலிகளையும் அவர் சந்தித்திருக்கிறார்.

நானாக இருந்திருந்தால்: அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் உடனடியாக ரியாக்ட் செய்திருப்பேன். அவரோ ஒவ்வொரு நாளும் கருணையாக நடந்துகொள்கிறார். மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை ஒருநாள் அவரை உலகம் உண்மையிலேயே யார் என்று பார்க்கும். அவர் அற்புதமான பெண். இப்படத்தை பார்த்து நான் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டேன். எனது கண்ணீரை அடக்கவும் முடியவில்லை.

இப்படிப்பட படங்கள் முக்கியம்: பாக்ஸ் ஆஃபிஸ் வசூலைவிடவும், இந்தப் படம் சிந்தனையையும் விழிப்புணர்வையும் தூண்டியிருக்கிறது. பெண்கள் துணிந்து பேசுவதற்கு இப்படம் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது. பல வணிக வெற்றிக இப்படியான ஒரு சமூக தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டன. இப்படக்குழுவினர் சாதித்துவிட்டார்கள் என்றே கருதுகிறேன்" என்றார். அவரது இந்தப் பேச்சு கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேலும் தனது காதலி பற்றி பொது மேடையில் இப்படி பெருமையாக பேசுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தேவரகொண்டாவின் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X