விஜய் தேவரகொண்டா மருத்துவமனையில் அனுமதி: காரணம்...

By Siva

Recommended Video

விஜய் தேவரகொண்டா சிரஞ்சீவி வீட்டு மருமகன் ஆகப் போகிறார்- வீடியோ

ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் மிகவும் பிரபலமான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்தார். அவருக்கு தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

தெலுங்கின் பிசியான ஹீரோவான அவர் ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

விஜய்க்கு கவலைப்படும்படி ஒன்றும் இல்லை. அவருக்கு ஓய்வு தேவை. ஆனால் அவரால் தற்போது பிரேக் எடுக்க முடியாது. அதனால் உடனே குணமடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

புதன்கிழமை காலை 6 மணி வரை ஷூட்டிங்கில் இருந்தேன். பிறகு பார்த்தால் எனக்கு காய்ச்சல் வந்து சோர்வாகிவிட்டேன். சீக்கிரம் குணமடைய வேண்டி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் காய்ச்சல், சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

ஏப்ரல்

ஏப்ரல்

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள டியர் காம்ரேட் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அந்த படத்தில் அவரும், ரஷ்மிகாவும் லிப் டூ லிப் காட்சியில் நடித்தது விமர்சனத்திற்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X