விஜய் சேதுபதி, மணிரத்னம், ஷங்கர்: லிஸ்ட்டு ரொம்ப பெருசா இருக்கே விஜய்

By Siva

Recommended Video

Vijay Devarkonda Screams on Rashmika: ராஷ்மிகா மீது கோவப்பட்ட விஜய்- வீடியோ

சென்னை: விஜய் தேவரகொண்டா தனது ஆசையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. நோட்டா படம் மூலம் கோலிவுட் வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர்.

விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு படங்கள் ரிலீஸானால் மொழி தெரியாவிட்டாலும் அவருக்காக பார்க்க தமிழகத்தில் பல ரசிகைகள் உள்ளனர். அதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவிகள்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடித்து கைதட்டல்களை பெற்றார். எந்த ஒரு முன்னணி ஹீரோவும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க யோசிப்பார்கள். இந்நிலையில் விஜய் சேதுபதி ஷில்பா நடித்ததை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல விஜய் தேவரகொண்டாவும் அசந்துபோயுள்ளார்.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

நடிப்பில் அமர்க்களப்படுத்தும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தமிழில் எந்தெந்த இயக்குநர்களுடன் சேர்ந்து படம் பண்ண ஆசைப்படுகிறீர்கள் என்று விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், மணிரத்னம், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் படங்களில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

மணிரத்னம்

மணிரத்னம்

காதலை கொண்டாடும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க பல இளம் ஹீரோக்கள் ஆசைப்படுகிறார்கள். விஜய்க்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஷங்கர் தற்போது இந்தியன் 2 பட வேலைகளில் பிசியாக உள்ளார். அடுத்ததாக அவர் முதல்வன் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி

இந்தி

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார். ஏற்கனவே விஜய்யின் அர்ஜுன் ரெட்டி படம் கபிர் சிங் என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாஹித் கபூர் நடித்த கபிர் ரூ. 260 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் விஜய்யின் மேலும் ஒரு படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாஹித் கபூரின் கெரியரில் பிரமாண்ட வெற்றி பெற்ற படம் என்றால் அது கபிர் சிங் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X