ராஷ்மிகா மந்தனாவை குடும்பத்துக்கு வரவேற்ற விஜய் தேவரகொண்டா தம்பி.. அண்ணி மீது இவ்வளவு பாசமா?

சென்னை: ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடந்து முடிந்தது. மொத்தம் இரண்டு முறை அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரியல் வாழ்க்கையில் இணைந்திருக்கும் அவர்களுக்கு அனைவரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா தனது அண்ணி ராஷ்மிகா மந்தனாவை குடும்பத்துக்கு மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவந்ததை அடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று அந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா மரபுகள்படியும் என மொத்தம் இரண்டு தடவை அவர்களது திருமனம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பக்கா கெமிஸ்ட்ரியோடு வலம் வந்த அவர்கள்; நேற்றிலிருந்து ரியல் வாழ்க்கையிலும் அப்படியே வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

Vijay Deverakonda Marries Rashmika Mandanna Brother Anand s Emotional Message Wins Internet
Photo Credit:

விஜய் தேவரகொண்டா பதிவு: திருமணத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் ஒருநாள் அவளை மிஸ் செய்தே. அவள் மட்டும் அருகில் இருந்திருந்தால் அன்று நான் கடந்து வந்த ஒவ்வொரு தருணமும் இன்னும் அழகானதாக இருந்திருக்கும் என்று எனக்கு தோன்றியது. நான் சாப்பிடும் சாப்பாட்டின் ருசியைவிடவும் எனக்கு முன் அவள் அமர்ந்து சாப்பிடும்போது கிடைக்கும் அந்த முழுமையைத்தான் என்னுடைய மனம் தேடியது.

தண்டனையாக தெரியவில்லை: ஜிம்மில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள்கூட ஒரு தண்டனையாக தெரியாமல் அவளுடன் இருந்தால் அது அழகான விளையாட்டாக மாறுமே என்று நான் நினைத்திருக்கிறேன். நான் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவள் பக்கத்தில் இருந்தால் மட்டும்தான் எனக்குள் ஒரு அமைதியும், சொந்த வீட்டில்தான் இருக்கிறோம் என்கிற பாதுகாப்பான உணர்வும், திருப்தியும் கிடைக்கிறது. அதனால்தான் நான் எனது சிற்ந்த தோழியையே என்னுடைய மனைவியாக்கிக்கொண்டேன்" என குறிப்பிட்டிருந்தார்.

ராஷ்மிகாவின் பதிவு: அதேபோல் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இன்ஸ்டாவில், "அன்புக்குரியவர்களே இதோ எனது உலகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். என்னுடைய கணவர் மிஸ்டர் விஜய் தேவரகொண்டா. உண்மையான காதல் என்றால் என்னவென்று எனக்கு புரிய வைத்தவர் அவர்தான். மன அமைதி என்பது எப்படி இருக்கும் என்றும் எனக்கும் உணர வைத்தவர் அவர். பெரிய கனவுகளை காண்பதில் எந்தத் தவறும் இல்லை என்று ஒவ்வொரு நாளும் எனக்கு தைரியம் கொடுத்தவர்.

ஆகச்சிறந்த விஷயம் அதுதான்: என் கற்பனைக்கும் எட்டாத உயரங்களை என்னால் அடைய முடியும் என என்னை தொடர்ந்து நம்ப வைத்தவர். யார் பார்க்கிறார்கள் என கவலைப்படாமல் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் ஆடுவதற்கு கற்றுக்கொடுத்தவர். நண்பர்களுடன் பயணம் செய்வதுதான் வாழ்க்கையின் ஆகச்சிறந்த விஷயம் என்பதை உணர வைத்தவரும் அவர்தான். இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். உன்னுடைய மனைவியாகிவிட்டேன் என்பதை நினைத்து சந்தோஷம். வா இந்த உலகத்திலேயே சிறந்த வாழ்க்கையை வாழ்வோம்" என தெரிவித்திருந்தார்.

ஆனந்த தேவரகொண்டா உருக்கம்: இப்படி இரண்டு பேரும் மாற்றி மாற்றி தங்களது காதலை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில்; விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா தனது அண்ணியை நினைத்து உருகி ஒரு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "ரசிகர்கள் எப்போதும் அண்ணியை பற்றி பேசும்போது அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று எனக்கு தெரியாமல் இருந்த தருணங்கள் நிறைய இருந்தன. இன்று என் அண்ணன் திருமணம் செய்துகொண்டார். நேரிமையான மற்றும் கருணையுள்ள ஒருவரை எனது அண்ணியாக பெற்றிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கை முழுக்க இப்படி சிரித்துக்கொண்டே சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்நால் முழுவதும் இணைந்து வாழ வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X