விஜய் தேவரகொண்டா மேடையில் செய்த காரியம்..இணையத்தில் குவியும் பாராட்டு!
ஹைதராபாத் : நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது உடல் உறுப்பு முழுவதையும் தானமாக வழங்குவதாக மேடையில் அறிவித்துள்ளார்.
கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி'திரைப்படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் பல ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டா.
தன்னுடைய சிறப்பான நடிப்பினால் தற்போது பல கோடி மக்களை தன்னுடைய தீவிர ஃபேனாக மாற்றியிருக்கின்றார். குறிப்பாக இளம் பெண்களின் கனவு கண்ணாக இருக்கிறார்.

லைகர்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியானத் திரைப்படம் லைகர். பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவான இத்திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்தது. தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி நிலையில், போராடினால் ஒரு பைசா கூட தரமாட்டேன் என விஜய் தேவரகொண்டா கூறிவிட்டார்.

உடல் உறுப்பு தானம்
லைகர் படத்தில் தோல்விக்குப் பிறகு நீண்ட நாள்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் நடிகர் விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற குழந்தைககள் மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பங்கேற்றார். பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அரசின் உதவியாலும், பொதுமக்கள் நன்கொடையாலும் நடந்து வருகின்றன.

அனைத்து உறுப்புகளும் தானம்
பலர் மனிதாபிமான அடிப்படையில் உடல் உறுப்புகளை தானம் செய்கின்றனர். உடல் உறுப்புகளை தானம் செய்வதால் நாம் இறந்த பிறகும், அந்த உடல் உறுப்புகளை மற்றவர்களை வாழ வைக்கும். உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு இல்லை. உடல் உறுப்புகளை வீணாக்ககூடாது. நான் என் அனைத்து உடல் உறுப்புகளை தானம் செய்வதாக இந்த மேடையில் உறுதியளிக்கிறேன் என்று கூறினார். இதனால் அவரை வலைத்தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சத்தமே இல்லாமல் உதவி
தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, ஆண்டுதோறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார். அது மட்டுமன்றி தன்னுடைய King Of The Hill ப்ரோடுக்ஷன்ஸ் மூலம் திறமையான புது முக நடிகர்களுக்கு சத்தமே இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை விஜய் தேவரகொண்டா செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











